பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உo. உறையூர் மருத்துவன் தாமோதரனுர் நோய் யாது என ஆராய்ந்தறிந்து, அங்நோய்க் காரணமும் கண்டு, அந்நோய் போக்கும் வழிவகைகளையும் அறிந்து, நோயுற்ருன் உடல்நிலை, அந்நோயளவு, அக்காலத் தின் தட்பவெப்பநிலை ஆகிய இவற்றையும் மனதில் இருத்தி, மருந்தளித்து நோய்தீர்க்கும் மருத்துவ முறையினைத் தமிழ்மக்கள் பண்டே அறிந்திருந்தனர்; அத்தகைய மருத்துவர்கள், தமிழ்நாட்டுச் சிற்றார்தோறும் இருந்து மக்கள் பிணிபோக்கிப் பணிபுரிந்திருந்தனர்; அத்தகைய மருத்துவர்களுள், உறையூரில் வாழ்ந்த தாமோதானர் என்ற மருத்துவர், பிழைப்பிற்காகத் தாம் மேற்கொண் டிருந்த மருத்துவத் தொழிலோடு, அறிவு வளர்ச்சியிலும் ஆழ்ந்த கருத்துடையவராய்த் தமிழ் அறிவு நன்கு வாய்க் கப்பெற்று, பெரும்புலவராய்ப் புலவரும், புரவலரும் போற்ற வாழ்ந்திருந்தார். . மருத்துவன் தாமோதானுர் பாடிய பைந்தமிழ்ப் பாடல்கள் ஐந்து; அவர், குராப்பள்ளித்துஞ்சிய பெருங் திருமாவளவனேயும், பிட்டங் கொற்றனேயும் பாராட்டி யுள்ளார். குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், உறை யூரிலமர்ந்து ஊராண்டவன்; குராப்பள்ளி என்னும் இடத்தே இருந்து உயிர் துறந்தவன்; தமிழாசர்கள் செய் யும் தலையாய தவருகிய, தம்முள் ஒருவரோடொருவர் பகைத் திவாழ்தலை மறந்து, அவர்க்கு மாருக, ஏனைய தமிழாசர்களோடு நட்புப்பூண்டு நல்லோர் போற்ற வாழ்ந்த பெருமைசால் பண்புடையவன்; இவன், தன் காலத்தே, பாண்டிப் பெருவேந்தனய் விளங்கிய வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியைப் பிரிவறியாப் பெருநண்பனுய்ப் பெற்றிருந்தான். இவன்மாட்டுக் காணலாம் இம் மாண் பினக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனர் கண்டு களித்து, அவ்வொற்றுமை கின்று நிலவ வாழ்த்தியுள்ளார்.