பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் மருத்துவன் தாமோதரனர் 79 பெருங் கிருமாவளவன், புலவர் போற்ற வாழும் பெருமையுடையான் என்பதறித்த, அவன் அரசில் தலைமை யூராம் உறையூர்வாழ் மருத்துவப் புலவர், அவன் நீடுவாழ விரும்பி வாழ்த்தியுள்ளார். நாட்டுமக்கள், பகைவராலும், பிறராலும் துன்புருமல் வாழ நாடாள்வதே நல்லரசின் இயல்பாகும்; அம் மக்களுக்குப் போர் முதலாம் செயற்கை நிகழ்ச்சிகளாலோ, மழையின்மை முதலாம் இயற்கையின் விளைவுகளாலோ கேடு வந்துற்றவிடத்தும்; இக் கேடுகளை எவ்வாறு போக்கிக் காப்பேன் ? எனக் கலங்காது கின்று போக்கி ஆளுதல் வேண்டும் ; இத்தகு பண்பு, தம் அாசன்பால் உண்டு என்பதை அழகிய ஒர் உவமையால் விளக்கிப் பாராட்டினர். கடலேச் சார்ந்த கழிநீர் கொண்டு உப்பை விளைவித்து, அவ் வுப்பைக் கல்கிறை நிலமாம் குறிஞ்சி முதலாம் உள் நாடுகளுக்குக் கொண்டுசென்று விற்கும் உமணர் என்ற உப்பு வணிகர், அவ் வுப்பினே கிறைய ஏற்றிய வண்டி, இடையில் பெருமணல் வெளியிலும், கிறைசேற்று கிலத் திலும் சிக்கியவிடத்து, அதைப் பொருட்படுத்தாது, மண்டியிட்டு இழுத்து, அவ் வண்டியை உரிய இடத்திற்குக் கொண்டு சேர்க்கும் வலிய எருதுகளை அறிந்த அவர் தன் நாட்டு மக்கள் துயர்துடைத்து ஆள்வதில், அவ் வெருது களே ஒத்தவன் எம் அரசன் என்று உவமை கூறி, அவனே யும் பாராட்டி, அரசன் கடமையினேயும் காட்டினர். தங்கள் அரசன் இவ்வாறு கல்லதைல் அறிந்த இவர், அவன் நெடிது வாழ விரும்பினர். வேந்தர்கள் வெண் கொற்றக் குடை பிடித்தல், தம்மீது விழும் ஞாயிற்று வெயிலே மறைத்தற்காக அன்று; தம் நாட்டுக் குடிகளுக்கு வரும் கொடுமையாம் வெப்பத்தைப் போக்கி வாழ வைப் பேன் என்ற கருத்தோடே யாகும் ; ஆதலின், அாசன் குடிகள், அவன் குடையினே வாழ்த்துதல் வழக்கம். பெருந்திருமாவளவனே வாழ்த்த விரும்பிய இவர் அவன் குடையினைக் கண்டவழியே பல்லாமல், அவன் குடை