பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வணிகரிற் புலவர்கள் போல் தோன்றும் பொருள்களைக் கண்டவழியும், அவன் குடையினைக் கண்டதேபோல் வாழ்த்துகின்ருர். ஒருநாள் முழுநிலா ஒளிவிடும் இரவில் வான வெளியினைப் பார்த்தார் புலவர். ஆங்குத் திங்கள் வெண் ணுெளி பாப்பி வழங்குவதைக் கண்டார் ; அக் காட்சி அவருக்குப் பெருந்திருமாவளவன் வெண்கொற்றக் குடை யினை கினைப்பூட்டிற்று ; வெண்திங்களை, அவன் வெண் கொற்றக் குடையென்றே கொண்டார்; உடனே, "வாழ்க வளவன்; வாழ்க அவன் குடை ' என்று வாழ்த்தினர். வாழ்த்திவிற்கும் அவர் கண்முன், வெண்திங்களோடு, பேரொளிவிட்டு விளங்கும் செவ்வாய்மீனும் கின்று காட்சி அளித்தது ; இருண்ட லேவானில் செவ்வொளி பாக்க விளங்கும் அச் செவ்வாய்மீன், நீலக்கடலிடையே மீன் பிடிக்க இாவிற் செல்வோர் தாம் ஏறிச்செலும் படகுகளில் ஏற்றிச்செல்லும் விளக்கின் காட்சியைக் கண்முன் கிறுத்தி அவர்க்குக் களிப்பூட்டிற்று. - இத்தகைய காட்சிகளும், கருத்துக்களும் ஒருங்கே விளங்கும் ஒர் அழகிய பாட்டால் பெருந்திருமாவளவனேப் போற்றி வாழ்த்தினர். முக்கீர் காப்புண் திமில்சுடர் போலச் செம்மீன் இனமக்கும் மாக விசும்பின் உச்சி நின்ற உவவுமதி கண்டு, கட்சி மஞ்ஞையின், சாமுதல் சேர்ந்த சில்வ?ள விறலியும், யானும் வல்விாைந்து தொழுதன. மல்லமோ பலவே கானல் கழியுப்பு முகத்து கல்காடு மடுக்கும் - ஆாைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உானுடை நோன் பகட்டன்ன; எங்கோன் வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன். வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின் மாலை வெண்குடை யொக்குமால் எனவே.’ (புறம்: சுo)