பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வணிகரிற் புலவர்கள் கடற்கரையில், கடலில் ஒடும் நாவாய்களுக்கு வந்து சேரும் துறை இது என அறிவித்து அழைக்க இாவில் ஏற்றிவைக்கும் கலங்கரை விளக்குகள் உண்டு. 'இாவின் மாட்டிய இலங்குச்சுடர் ஞெகிழி உரவு நீர் அழுவத்து ஒடுகலம் கரையும் துறை.” - (பெரும்பாண் : கசக-டுக). கடல் வாணிபம் கருதிப் பல்வேறு நாடுகளினின்றும் தமிழகம் புகுந்த மக்கள் அக்கடற்கரையை யடுத்த இடங். களில் இருந்து வாழ்வர். . கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையும் இலங்கு நீர்வாைப்பு (சிலப். டு: கக-உ}. பிறநாடுகளுக்கு அனுப்புதல் வேண்டி வந்த உள்நாட் டுப் பொருள்களும், வெளிநாடுகளிலிருந்து வந்து இறங்கிய பொருள்களும், கடற்கரைக்கண் உள்ள பண்டசாலைகளில் மலைபோல் குவிந்து கிடக்கும். நீரினின்று கிலத்து ஏற்ற வும் கிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பல பண் ட்ம்”. அப்பொருள்களின் அளவும் கிறையும் அளந்து கண்டு, அவற்றிற்காம் சுங்கம் கொள்ளும் அரசியல் ஆணே யாளர், அவற்றின்மீது தங்கள் அரச இலாஞ்சனே இட்டுக் காப்பர். . 'அளந்தறியாப் பலபண்டம் வ் ரம்பறியாமை வந்தீண்டி அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்அணங்கினேன் புலிபொறித்துப் புறம் போக்கி." (பட்டினப்: க.க.க-டு) என்பன பெருந்துறைகளின் நிலையை விளக்குவன. இவையே பன்றித் தமிழகத்தின் கடற்கரையில் உள்ள சிற். அார்கள் தோறும், கரையோரங்களிற் சென்று, ஒரிடத் துள்ள பொருளை ஒரிடத்திற்குக் கொண்டு. சேர்க்கும். சின்னஞ்சிறு படகுகள் பல வரிசையாகப் பிணிக்கப் பெற்றிருக்கும். - . .