பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். மதுரைக் கூத்தனுர் மதுரைக் காருலவியங் கூத்தன் என்றும், மதுரைத் தமிழக் கூத்தன் கடுவன் மள்ளனர் என்றும் சிறிது வா லாறு உணர உணர்த்தப்பட்டாரைப் போலன்றி, இவர் மதுரைக் கூத்தனர் என எத்தகைய வரலாற்றுக் குறிப்புக் களும் இன்றி உணர்த்தப்பட்டமையால், மதுரையில் வாழ்ந்த அம் மூன்று கூத்தர்களுள், இவர் சிறிது மிக்க றப்புடையராவர் என்பது புலப்படும். மதுரைக் கூத்த ஞர் என்று கூறிய அளவிலேயே உணரக் கூடிய அளவு, இவர் மக்களால் அறியப்பட்டிருந்தவராவர். இவர், கால் இறங்கிப் பெய்யும் மழை, யானையின் துதிக்கைபோல் தோன்றும் என்றும், பெருங்களிற்றுத் தடக்கை புாையக் கால்வீழ்த்து'; மேகங்கள் ஒன்றுகூடி கிற்கும் காட்சி, பெண் யானைகள் பல கூடிக் கலந்திருக்கும் காட்சி போலும் என்றும், இரும்பிடித் தொழுதியின் சண்டுவன குழிஇ '; மேகம் பெய்யும் பெரு மழைத்துளி போடு கலந்து விழும் ஆலங்கட்டிகள், மகளிர்கள் மகிழ்த்து ஆடும் கழங்காட்டத்தில் மேற்கொள்ளும் கழற்சிக் காய் களைப்போல் உள்ளன என்றும், வணங்கிறை மகளிர், அயர்ந்தனர். ஆடும் கழங்குறழ் ஆலி'; தலைவன் தேரித் பூட்டிய விரைந்து செல்லும் வெண் குதிரைகள், வானில் பறந்து செல்லும் வெள்ளை அன்னப் பறவைகளைப்போலும் என்றும், வானின் வயங்குசிறை அன்னத்து கிரை பறை கடுப்ப, நால்குடன் பூண்ட கால் வில் புரவி' (அகம் : டங்ச.) கூறிய உவமைகள் நயம் சிறந்து விளங்கி, அவர் புலமைக்குப் பாராட்டளிக்கின்றன.