பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - வள்ளல்கள்

அணிபூண் அணிந்த யான இயல்தேர் அதியமான் பரிசில் பெறுரஉம் காலம் நீட்டினும், நீட்டாதாயினும், யாசீனதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யா காதே." (புறம் : ககே) ண்ேட பெரிய தேர்; தலை உயர்த்தி நடக்கும் மதம் மிக்க களிறு ; விரைந்து செல்லும் குதிரை; வேலேந்திய வீரர் ஆகிய நால்வகைப் படைகளாலும் கிறைந்தது அதிய மான் பெரும்படை, இந் நாற் படைகளே அன்றி, வாழ்வின் துணையென வில்லையில்லாமல்வேறு காணுதவரும், எதிர்த்து வருவார் எத்துனே ஆற்றல் வாய்ந்தோராயினும், இன்னல் விளத்து இயற்கையோடு இரண்டறக் கலக்கச் செய்யாது விடாத இயல்பினரும் ஆகிய மழவர் என்ற ஒருவகைப் போர்வீரர் குழுவையும் பெற்றிருந்தான்் ; இவ்வாறு பெரும்படைத் தலைவனுய் விளங்கியதோடு, அப் பெரும் படையைப் பணிகொள்ளும் பெருவீரனுய், அதற்கேற்ற ஆற்றலும், ஆண்மையும், முழவெனப் பருத்த தோளும், முழங்கால் அளவும் நீண்ட கைகளும், அகன்ற வலிய மார் பும் கொண்ட உறுதி மிக்க உடலமைப்பும் உடையனவன் ; தான்் பெற்றிருந்த பெரும்படைத் துணையால், தன் காட் டைச் சூழ ஆண்டிருந்த அரசர் அனைவரையும் வென்று திறைகொண்டு வாழ்வானுயினன்; அவன் படை வீரர், ப ைகவர் நாட்டுட் புக்குப் போரிட்டுக் கைப்பற்றிக் கொணர்ந்த அவர் ாேட்டு ஆனிரைகள் அளவிறந்தனவாம்.

சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி கெடலருந்துப்பின் விடுதொழில் முடிமார் கண்யெரி நடந்த கல்காப்கானத்து வினவல் அம்பின் விழுத்தொடை மறவர் தேம்பிழி நறுங்கல் மகிழின் முண்கடந்து - வீங்குமென் சுரைய ஏற்றினம் தரூஉம். (அகம்: கடுே) நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி கடுமுனையகலத்த கொடுவில் ஆடவர்

ஆகொள் பூசல்.’ - (அகம் : க.எஉ)