பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரி - 器盘

வேட்டையாடிக் கொன்ற யானைகளின் கோடுகளை விலை பாகத்தந்து பெற்ற உணவுண்டு உயிர்வாழ்வர் :

" காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின் - -

கடுங்கண் வேழத்துக் கோடுகொடுத் துண்ணும் - வல்வில் ஓரி கொல்லிக் குடவரை." (குறுங்: க.00)

இக் கொல்லி மலையையும், அம் மலையைச் சூழ அமைந்த சிறு நாட்டையும் ஆண்டிருந்தான்் ஒரி எனும் பெயருடையாைெரு குறுநில மன்னன்; ஒரி விற்போர் வல்லவன்; வில்லேந்தி வேட்டம்புரியும் வகை நன்கறிந்த வன்; அதனல் வல்வில் ஒரி என வழங்கப்பெற்ற சிறப் புடையவன் ; இவன் வில்லாற்றல் வன்மையை நேரிற்கண்டு வியந்து பாராட்டினரும் உளர்; ஒரியின் கைவில்லினின் அம் புறப்படும் ஒர் அம்பு விரைந்துசென்று தொடக் கத்தில் வலிய வேழத்தை வீழ்த்தும்; பின்னர்ப் புலியின் உயிரைப் போக்கும் ; ஆண்டுகின்றும் புறம் போந்து மானே மாளச் செய்யும்; பன்றியின் உயிரைப் பறிக்கும்; இறுதியாகப் புற்றில் அடங்கிக் கிடக்கும் உடும்பின் உட விற் சென்று தைத்துச் செயலறும் எனின் அவன் வில் லாண்மையினே வியவாது கிற்பாரும் உளராமோ !

'வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி

பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப் புழற்றலப் புகர்க்கலே உருட்டி, உரற்றலேக் கேழல் பன்றி வீழ, அயலது . . . . . . . . ஆழம் புற்றத்து உடும்பிற் செற்றும் வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்.'

- (புறம்: கடுஉ) வில்லாண்மை மிக்க வீாகை விளங்கிய வல்வில்ஓரி, வரையாது வழங்கும் வண்மையு முடையனவன்; மாரி போல் வழங்கும் மனவளம் உடைய ஒரி, தன்னைப் பாடி வரும் பாணர் முதலாயினர்க்குத் தேர் பல உவங்களிக்கும் தெளிந்த உள்ளமும் உடையணுயினன்; ' இாரிவண் மகிழ் ஒரி” என்றும், ! திண்டேர்க் கைவள் ஒரி ' என்றும்