பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. நள்ளி

தென்னவர்தம் தலைநகராம் மதுரை மாநகர்க்கும் தெற்கே கோட்டி என்ற பெயருடையதொரு மலையிருந் தது; அஃது அடுக்கிய பல குன்றுகள் தன்னேச் சூழ கிற் கும் அழகினேயுடையது; நாடு, கலம் பல பெற்று சனி சிறந்து விளங்குதற்கு உறுதுணை புரியும் பெரு மழை, பொய்யாது பெய்யும் மழைதரு மேகங்கள் என்றும் படிந்து கிடத்தற்காம் உயர்வினை புடையது; பளிங்கைப் பிளந்து கண்டாற் போலும் தெளிந்த நீர்நிலை பலவற்றைக் கொண்டது; அக் குன்றுகளைச் சூழ அடர்ந்த காடுகளும் அமைந்திருந்தன; அக்காடு ஆனுேம்பி வாழும் ஆயர்க்கு வாழ்விடமாம் அத்துணை வளம் செறிந்தது; அவ்வாயர் தரு நறுநெய் நாட்டவர் போற்றும் நலமெலாம் கொண் டது; அக் காடு, மணமும், அழகும் மாண்புறக்கொண்ட

க்ாந்தள் மலர்கள் உண்மையாலாப உயர்வும் உடையது.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த தோட்டி மலையையும்: அதைச் சூழ உள்ள காடுகளையும் காவல் மேற்கொண்டு வாழ்ந்திருந்தான்் நள்ளி எனும் கல்லோன்; நள்ளி கண்டீ ரக்கோ எனவும், கண்டீரக்கேர்ப்பெரு நள்ளி எனவும் அழைக்கப் பெறுவன்; நள்ளி, நெடியபல தேர்ப்படை உடையவன்; விற்போர் வல்ல வீரர் பலரையும் பெற்றிருந் தான்் அவன்; விரைந்து செல்லும் குதிரைகளையும் கொண்டிருந்தது அவன் படை, தன்னெடு பகைகொண்டு வந்தாரை வென்று துரத்தும் வாளாண்மையும் அவன்பால் பொருந்தியிருந்தது; இத்துணேப் பேராற்றல் பெற்றிருந்த கள்ளி, வளம் பல பெற்ற நாடும் உடையணுகவே, தன்னைப் பாடிவரும் பாணர் முதலாயினுர்தம் வருத்தம் தீரத், தேரும், களிறும், கிாண்ட செல்வமும் சிந்தையுவந்தியும் சிறந்த கொடையாளனுமாயினன்.

.. கள்ளி நாடாண்டிருந்த தோட்டிக் குன்று, அதைச் சூழ இருந்த இருள் • செறிந்த காடு, அவன் கொற்றம்,