பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நள்ளி 49

மான்கணம் தொலைச்சிய குருதியம் கழற்கால் வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச் செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன் தொழுதனென் எழுவேன் கைகவித்து இரீஇ இழுதின் அன்ன வால்கிணக் கொழுங்குறை கானதர் மயங்கிய இளையர் வல்லே தாம்வந் தெய்தா அளவை ஒய்யெனத் தான்் ஞெலி தியின் விரைவணன் சுட்டுகின் இரும்பே ரொக்கலொடு தினமெனத் தருதவின், அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி நன்மரன் நளிய குறுங்தண் சாரல் கன்மிசை அருவி தண்ணெனப் பருகி விடுத்தல் தொடங்கினே கை, வல்லே

பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்

பிறிதொன் றில்லைக் காட்டுநாட் டே"மென மார்பிற் பூண்ட வயங்குகா ழாரம் மடைசெறி முன்கைக் கடகமோ டித்தனன்; எங்கா டோ?என நாடும் சொல்லான்; யார் ரோ? எனப் பேரும் சொல்லான்; பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே

நளிமலை நாடன் நள்ளியவன் எனவே. (புறம் : கடு)

பாடிப் பிழைக்கும் தொழில் உடையவர் பாணர்; பொருள் அளித்துப் புரக்க வல்லாரைத் தேடிச்சென்று, அவர் வாயில்முன் கின்று, காலையில் மருதமும், மாலையில் செவ்வழியும் பாடி மகிழ்வித்துப் பொருள்பெற்று வாழ். தல் அவர் குலத்தொழில்; அத்தகைய பாணர்தம் வறுமை, பெலாம் நீங்குமாறும், மற்றும் பிறர் இடம் சென்று பொருள் வேண்டி கில்லாவாறும் பெரும்பொருள் அளித்து விட்டான் நள்ளி; அதனல், பாடல் தொழில் வல்ல அப் பாணர், தம் தொழிலையே மறந்து விடுவாராயினர்;. காலையில் பாடவேண்டுவது மருதப் பண்; மாலையில் பாட வேண்டுவது செவ்வழிப் பண் என்ற பண்ணறி அறிவை யும் இழந்து, செவ்வழிப் பண்ணைக் காஃபியிலும், மருதப்.