பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி 53.

வள்ளல்கள் எழுவருள்ளும் தலைசிறந்தோனவன்; ஒருநாள் தேர் ஏறிச்சென்ற பாரி, வழியில் தழைத்து வளர்ந்த முல்லைக் கொடியொன்று, படர்சற்குரிய கொழுகொம் பின்றிக் காற்ருல் அலைப்புண்டு வருந்துவதைக் கண்டான்; " அந்தோ ! இக் கொடி, நம்மைப்போல் பேசும் ஆற்றலைப் பெற்றுளதாயின், தன் குறைகூறி அழுகிருக்கும்; ஆனால், அஃது அவ் வாற்றலைப் பெருமையாலன்ருே அது செய் யாது வருந்துகிறது எனினும், அதன் தேவை கண்ட நான், அதற்குத் துணை செய்யாது போதல் தகுதியன்று,” எனத் துணிந்தான்்; உடனே தான்் ஊர்ந்துவந்த பொற் றேரை அதன் அருகே சிறுத்திப் பற்றிப் படருமாறு. விட்டுச் சென்ருன் பாரியின் இவ்வருள் உள்ளத்தையும், கொடைச் சிறப்பையும் தமிழகம் முழுவதும் பாராட் .டிற்று; -

' பூத்தலை அரு.அப் புனைகொடி முல்லை

15ாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுங்தேர் கொள்கெனக் கொடுத்த . . . பரங்தோங்கு சிறப்பின் பாரி.' (புறம் : உ00) 1. ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்

முல்லைக்கு ஈத்த செல்லா கல்லிசைப் படுமணி யாசீனப் பறம்பிற்கோமான் . . நெடுமாப் பாரி.' . (புறம் : உ0க).

" சிறுவி முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய , : . . . . . .

பிறங்குவெள் ளருவி வீழும் சாரல் - - .." பறம்பிற் கோமான் பாரி.' (சிறுபாண் : அ.க.க.க) கொடை வள்ளலுக்கு எடுத்துக் காட்டாக இவனேயே கொண்டது. உலகம்; கொடுக்கிலாதான்ப் பாரியே யென்று கூறினும் கொடுப்பாரிலை” என இவனது வரையா வண்மை சைவசமயாசாரியருள் ஒருவராய சுங்காமூர் த்தி காயனராலும் எடுத்துரைக்கப்பட்டுளது என்றால், இவன் பெருமையினே என்னென்பது பாரிபால் வந்து பொருள் வேண்டி நிற்போர் பெரும் புலவராக, அருங்குணச் சீலராக இருக்க வேண்டும் என்பதில்லை. வாயில் வந்து கின்றேர்