பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

και ιμπfi 61

பாரியின் புகழ் இயல்பாகவே எங்கும் பரவியிருந்தது; இம்முற்றுகை அவன் புகழை மேலும் உயர்த்துவதா யிற்று ; பாரியின் புகழ் வளர்வதைக்கண்டு பொருமை கொண்ட மூவேந்தர்கள் அவன்புகழ் மேலும் வளரத் தாமே காரணமாயது கன்டு வெட்கித் தலை குனிந்தனர்; அதனல், அவனே வாழவிடக் கூடாது என்ற எண்ணம் அவர்க்கு முன்னேயினும் பன்மடங்கு மிக்கது; ஆனல், பாளியைப் போரில் வெல்வதோ இயலாது; அதை, அவர்கள் கேரிலேயே அறிந்துகொண்டனர்; ஆகவே, அவர்கள் போர் முறையை மேற்கொள்ள விரும்பவில்லை ; கபிலர் கூறியன அவர் தம் கவனத்திற்கு வந்தன; பேரரசர்கள் பிழைநெறி செல்லார் என்றே கபிலர் உண்மையினே உரைத்தார் ; ஆனல், அப் பேரரசர்களின் பொருமையுள்ளம், நெறி தவறுவதைத் தடுக்காது போயிற்று, கபிலர் கூறியவாறே பாணர்போல் சென்று, பாரியைப் பாடிப், பரிசிற் பொரு ளாக அவனேயே பெற்று உடன்கொண்டு சென்று உயிர்க் கொலே புரிந்துவிட்டனர். -

அந்தோ! மாரியனேய பாரி மறைந்து போயினன்; அவன் மறைவு கேட்ட பாணர் பரிந்தனர்; வயிரியர் வருந்தினர்; இரவலர் எங்கினர்; கபிலர் கண்கள் கடல்க ளாயின; பாரி இல்லாவாழ்வு, பாலைநில வாழ்வுபோல் பாழ் என எண்ணினர்; பாரியை இழந்து தனித்து உயிர் வாழ்கலை வெறுத்தார்; ஆனால், பாரி, இறத்தற்குமுன் கபிலரை அருகழைத்து, ஐய! என் பிரிவினேப் பொருது உயிர்விடாதிருக்கத் தங்களை வேண்டுகின்றேன்; தாங்கள் இன்னும் சிலநாள் வாழவேண்டும் என்பது என் வேண்டு

கோள்” என்று கூறினன்; பாரியின் அன்புக் கட்டளையினை

அவரால் மறுத்தல் இயலாதாயிற்று; உயிரோடிருந்து பொருள்கொடுத்துப் புலவரைப் போற்றித் தமிழ்வளர்த்த பாரி, இறந்தும் தமிழ் வளர்த்தான்்; அவன் வேண்டா திருப்பின், அவைேடு கபிலரும் இறந்திருப்பர்; அப் போதே இறந்திருப்பின், அதற்குப் பின் பாடிய அவர் பாடல்களைத் தமிழுலகம் பெற்றிராகன்ருே? அப்பாடல் - வ.-5