பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி 65

கோவே இவர்கள், முல்லைக்குத் தேரீந்த "வள்ளியோன் மகளிர்; நான் ஒரு பரிசிலன்; மேலும் அந்தணன்; இவரை மணந்துகொள்ளத்தக்க மாண்புடையாய் நீ என உணர்ந் கேன் இவர்களை நான்கா, ஏற்று மணந்து இனிது வாழ்க!” என்று வேண்டினர். -

' விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே..!

இவரே, பூத்தலே யருஅப் புனைகொடி முல்க்ல காத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்; . யானே, பரிசிலன் ; மன்னும் அந்தணன் ; நீயே வரிசையில் வணக்கும் வாள்மேம் படுகன் ; கினக்கு யான் கொடுப்பக் கொண்மதி!' (புறம் : உயம்) - ஆனல், கபிலர் வேண்டுகோள் வீணுயி ற்று ; பேரரசர் மூவர்க்கும் பகைவனுகிய பாரியின் மகளிரை மணந்து கொண்டால், அவ்வரசர் தன்னேயும் பகைப்பர் என அஞ்சியோ, அம்மகளிரின் சீரழிந்த செல்வகில்ே கண்டு

நானியோ, அம்மகளிரை மணக்க மறுத்துவிட்டான்.

விச்சிக்கோன்பால் விடைபெற்ற கபிலர், பாரிமகளிர் பிறந்த வேளிர் மரயிலே வந்த இருங்கோவேள் என்பான், ஆண்மை, ஆற்றல், அருளுடைமையால் சிறந்து விளங்குவ தறிந்து, அவன் நாடு சென்று அவனேக் கண்டார்; வேளிருள் வேளே இம் மகளிர் முல்லைக்கு மணித் தேரும், இரவலர்க்கு முந்நூறு ஊரும் கொடுத்துப் புகழ் கொண்ட பறம்பிற் கோமான் பாரியின் மகளிர்; நான் இவர் தந்தை தோழன்; அந்தணன்; புலவன்; அரசரும் கண்டஞ்சும் ஆண்மையும், பாடி வரும் பாணர்க்குப் பொன்னே அள்ளி வழங்கும் அருளும் ஒருங்கே யுடையாய் நீ என்பது உணர்ந்தேன் ; ஆகவே, உனக்கு மணம் செய்து கொடுக்க வேண்டி மகளிரொடு வந்துளேன்; இவர்க்கு மகிழ்ச்சியும், என்க்கு மன அமைதியும் உண்டாக இவர் களை ஏற்றுக் கொள்க’ என்று வேண்டினர்.