பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. பேகன்

மதுரை மாவட்டத்தில், பொதினி என்ற பெயருடைய மலையகத்தோரூர் உளது; அஃது ஆவிநன்குடி என்ற பெயரானும் வழங்கிவந்துளது : இப்போது, பழனி என்ற பெயரான் வழங்கும் மலேயே அவ்ஆவிநன்குடி , முருகன் உறையும் ஆறு படை வீடுகளுள் ஆவிநன்குடியும் ஒன்று : பழனிமலை முருகனுக்குரியது என்பதற்கேற்ப, பொதினி மலைக்குரியோனுகிய நெடுவேளாவி என்பானின் போற்ற லுக்கு, முருகனின் போர்த்திறம் உவமை கூறப்படுவதும், அம்மலை தெய்வக் காப்புடையது எனக் கூறப்படுவதும்

ஆ கை. - - . . . .

  • முழவுறம் திணிதோள் நெடுவேள் ஆவி பொன்னுடை நெடு நகர்ப் பொதினி.' 'முருகன் கற்போர் நெடுவேள் ஆவி

அறுகோட்டு யானைப் பொதினி.' (அகம் : க. க) ஈர்ந்தண் சிலம்பின் இருள்தாங்குகளிமுழை அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல் காடன் பேகன்.' (புறம் : கடுஅ) ஆவிநன்குடிக்குச் சித்தன் வாழ்வு என்ற பிறிதொரு பெயரும் உண்டு. 'இனிச் சித்தன் வாழ்வு என்று சொல்லு கின்றவூர் முற்காலத்து ஆவினன்குடி யென்று பெயர் பெற்றதென்றுமாம்; அது, நல்லம்பர் நல்லகுடி யுடைக் துச் சித்தன் வாழ்வு இல்லங்தொறும் மூன்று எரி புடைத்து, எல்லாவப், பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியகின், நாட்டுடைத்து நல்ல தமிழ், என்று ஒளவை பார் கூறியதனன் உணர்க. சித்தன் என்பது பிள்ளையா ருக்குத் திருநாமம்,” (திருமுருகாற்றுப் படை: கனசு) என நச்சினர்கினியர் கூறுவது காண்க. ஆவினன் ಶ್ರೀவேளிருள் ஒரு பிரிவினாய ஆவியர் என்ற குறுகில மன்ன ரால் ஆளப்பட்டமையால் வந்த பெயராம். அகநானூற்று அரும்பதவுடிைகாரர், 'நெடுவேளாவி, குறுகில மன்னன்; பொதினி, ஆவிமலை’ என எழுதுவது உணர்க.