பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய் 3

நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல் பறம்பிற் கோமான் பாரியும், கறங்குமணீ வாலுளைப் புரவியொடு வையகம் மருள ஈர நன்மொழி இரவலர்க் கீந்த அழல்திகழ்ந் திமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் கழல்தொடித் தடக்கைக் காரியும், நிழல் திகழ் நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆயும், மால்வரைக் கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த உரவுச்சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல் அரவக் கடல்தானை அதிகனும், கரவாது நட்டோர் உவப்ப நடைப்பரி காரம் முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளியும், நளிசினை நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக் குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த காரிக் குதிரை காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் எனவாங்கு, எழுசமம் கடந்த எழுவுறழ் திணிதோள் எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம் விரிகடல் வேலி வியலகம் விளங்க."

  • . . . (சிறுபாண் : அச-ககச)

என, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும்,

"முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்
 அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக் 
 கறங்கு வெள்ளருவி கல்லலைத்து ஒழுகும் 
 பறம்பிற் கோமான் பாரியும், பிறங்கு மிசைக் 
 கொல்லியாண்ட வல்வில் ஓரியும், 
 காரி யூர்ந்து பேரமர்க் கடந்த 
 மாரி யீகை மறப்போர் மலையனும், 
 ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் 
 கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும் 
 ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கு நளிமுழை