பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ஒய்மான் நல்லியக்கோடன்

தென்னர்க்காடு மாவட்டம் கிண்டிவனம் வட்டத்தை யும், செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத் தென் பகுதியையும் தன்கண் கொண்ட நாடு, தமிழ்ச்சங்க காலத்தே ஒப்மானடு என்ற பெயர் பெற்றிருந்தது. அதிய மான் நெடுமானஞ்சி பிறந்த அதியர் குடியும், பேகன் பிறந்த ஆவியர் குடியும்போன்ற பழந்தமிழ்க் குடிகளுள், ஒவியர் எனும் குடியும் ஒன்றாம்; அகியர் குடிவந்த நெடுமா னஞ்சி அதியமான் என அழைக்கப் பெறுதலேபோல்

ஒவியர் குடிவந்த அரசனும், ஒவியர்மான், ஒவியமான் ஒய்மான் என அழைக்கப்பெறுவன் ; அதைப்போன்றே. ஒவியர் ஆண்ட நாடும், ஒய்மான் நாடு எனவும், ஒய்மானுடு எனவும் அழைக்கப்பெறும்.

ஒய்மானடு, ஐங்கில வளமும் அமையப்பெற்ற அழகிய நாடு. அங் நாடு, மாவிலங்கை, எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், கிடங்கில் போன்ற பெரிய நகரங்களைத் தன் னகத்தே கொண்டிருந்தது. இவற்றுள், நாட்டின் தலை நகராம் பெருமையுடையது மாவிலங்கை. மாவிலங்கை நீர்வளமும், கிலவளமும் கிறையக்கொண்ட மருதநிலத்து மாாகராகும்; அவ்வூரையடுத்து ஓடிவரும் ஆறு, தன்கண் புகுந்து நீராடும் மகளிர் பற்றி நீந்தும் புணையாகப் பயன் படத்தக்க சந்தனக் கட்டைகளையும், அகிற்கட்டைகளையும், சுரபுன்னே மரத்தின் நறுமலர்களோடு அடித்துக் கொணர்ந்து ஒதுக்கும். அவ்வூர்வாழ் இளமகளிர், கோரைக்கிழங்கு தேடிப் பன்றி உழுத சேற்றுகிலத்தில் ஆடப்புகுந்து, அங்கிலத்தைக் காலால் கிளறியவிடத்து, ஆண்டு ஆம்பற்கிழங்கும், யாமை முட்டையும் அகப்படக் கண்டு அகமகிழ்வர். நிலத்துட் புகுந்து கெல்லரியும் உழவர் தம் கூரிய அரிவாள் வாய் மழுங்கியவிடத்து விரைந்து தொழிலாற்றுவான்வேண்டித் தம் அருகே கிடக்கும் யாமை யின் வளைந்த முதுகு ஒட்டைத் தீட்டுக் கல்லாக்கொண்டு தீட்டுவர். அத்துணே மிகுவளம் உடையது. அம். மாவிலங்கை. " . . . . . -