பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்மான் நல்லியக்கோடன் 事 91

"செய்க்கன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்

இன்முகம் உடைமையும், இனிய ளுதலும், செறிந்துவிளங்கு சிறப்பின் அறிந்த்ோர் ஏத்த அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும், ஆணணி புகுதலும், அழிபடை தாங்கலும், வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்தக் - கருதியது முடித்தலும், காமுறப் படுதலும், ஒருவழிப் படாமையும், ஓடியது உணர்தலும் அரியேர் உண் கண் அரிவையர் ஏத்த, அறிவுமடம் படுதலும், அறிவுகன் குடைமையும், வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்தப் பன்மீன் நடுவண் பான்மதி போல இன்னகை ஆயமோடு இருந்தோன்." - (சிறுபாண் : உ0ள-உ0) நல்லியக்கோடன்பால் அமைந்து கிடந்த பண்பு கலம், அவனைப் பாடிய நல்லூர் நத்தத்தனுரை இந்த அள வோடு சிறுத்தவில்லை. அவர் அவனே மேலும் புகழலானுர்; நல்லியக்கோடன், தாய், தந்தை, தன்முன், ஆசிரியன் போலும் ஆண்டால் முதிர்ந்தோர்க்குக் கூப்பிய கையுடை யான் என, அவன்பால் அமைந்த பெரியோரைப் பணியும் பண்புடைமையினேப் பாராட்டினர்; வீரர்களுக்கல்லாமல், மகளிர் அணேய மலர்த்த மார்புடையான் என, அவன் காதற். சிறப்பினைப் புகழ்ந்தார் ; உழவர், தம் உழுதொழிலினை ஒரு குறையும் இன்றி நன்கு ஆற்றுமாறு நாடாண்டான் என, அவன் கல்லரசின் நன்மையினே நாவா வாழ்த்தினர்; தேரேறி வந்து போர்புரிவார் தம்மைப் போர்புரிந்து ஒழிக்கவல்ல வேற்படையுடையான் எனப் பகைவர்க்கஞ்சா அவன் பண்பினேப் பாராட்டினர் ; இவ்வாறு நல்லூர் நத்தத் தருைம், புறத்திணை நன்னகருைம் போற்ற நாடாண் டிருந்தான்் கல்லியக் கோடன். - - - முதுவோர்க்கு முகிழ்த்த கையின எனவும், இளையோர்க்கு மலர்ந்த மார்பினே எனவும், ஏரோர்க்கு கிழன்ற கோலினே எனவும், தேரோர்க்கு அழன்ற வேலினே எனவும். , ,

(சிறுபாண்: உங்கச).