பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 69 347. செய்து விறலியர் நாளைத் திருவுலா எய்தும் அனகன் எனக்கேட்டாள்-வெய்யதீப் 348. போலாயும் அண்ணல் குலத்தோன் புகுவித்த மாலாய் தழிஇக்கொள்ள வாஎன்ருள்-வேலாய் 349. அடவந்தா யேனும் அரசன் மரபு. (விடமாயும் தொடவந்தாய் எய்துகெனச் சொன்னுள்350. நம்காள மேகம் நரலை கடையவந்த - - திங்காள் வருதிஎனச் செப்பினுள்-பொங்கோசை 351. கூற்றுக் கெதிரினும் கோத்துரந்த இந்திர ஏற்றுக் கனமணிஎன் றேமுற்ருள்-ஆற்றரிய 346-7. தீங்கிளவி செய்து - இனிய மொழிகளைச் சொல்லி, அனகன் எய்தும், அனகன்சோழன். என- என்று விறலியர் தெரிவிக்க. 347-53. மாலை முதலியன காமுற்றவருக்குத் துன்பத்தை உண் டாக்குபவையானுலும் சோழனுடைய தொடர்புடைமையால் அவற்றை வெறுக்காமல் விரும்புவேன் என்கிருள். 348. அண்ணல் குலத்தோன்-சோழர் குல முதல்வகிைய கதிரவன். புகுவித்த - புகச் செய்த, மாலாய் - அந்தி மாலையே. நீ தீப்போல இருந்தாலும் சோழன் குல முதல்வனுல் புகுத்தப்படுவதால் உன்னை விரும்பித் தழுவிக் கொள்ள வா என்ருள். வேலாய் - க்டலே. 349. அட-என்னைத் துன்புறுத்த. அரசன் மரபு தொட வந்தாய்சோழ அரசனுடைய குலத்தினேராகிய சகரர்கள் தோண்ட உண்டான ய், கீழ்கடலைச் சகரர்கள் தோண்டினர்; அதனுல் சாகரம் என்னும் பெயர் வந்தது. விடமாயும் - விடம் போல் இருந்தாலும். . . . * - - 350. நம் காளமேகம் - நம்முடைய கரியக் மேகம் போன்ற சோழன்; திருமாலாக எண்ணிச் சொன்னது. நரலை. கடல். பாற்கடலைக் கட்ைந்தபோது அதிலிருந்து எழுந்த பொருள்களில் ஒன்று சந்திரன். ஒசை - மணியின் ஒசை. 351. கூற்றுக்கு எதிரினும் . யமனுக்கு ஒப்பாக இருந்தாலும். கோ. துரந்த இந்திர ஏற்றுக் கனமணி என்று சோழன் ஏறி ஒட்டிய இந்திர்ணுகிய இடபத்தின் கனமான மணி என்று கருதி, சூரியூ வமிசத்தில் தோன்றிய ககுத்தன் என்பவன் இந்திரனை இடபமாக்கி ஊர்ந்தான் (குலோத்துங்க. 3, இராசராச. 10); இவர்குலத்தோர், தோன்றலைப்பண் டிந்திரன்தாண் விடையேருய்ச்சுமந்தோனும்" (கம்ப. குலமுறை. 3). ஏமுற்ருள்-இன்பமுற்ருள். ஆற்றரிய - சகிப்பதற்கு அரிய.