பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 13 நோக்கால், உருகி இருவரும் ஒள்.அழகின் வெள்ளம் பருகி நெகிழ்ந்த பதத்தே. (298-9) குலோத்துங்க சோழன் உலாவில் தெரிவையும் சோழனும் பார்வையால் வேட்கை கொள்கிருர்கள்; இருவரும் தம்மில் எதிர்எதிர் நோக்கா ஒருவ ரெனவேட்கை ஒத்தார்’ (கு.உலா, 331) இராச ராச சோழனுலாவில் பெதும்பையும் சோழனும் அவ்வாருகின் றனர்! ஒருவ ரொருவர்க் குருகி உருகி இருவரும் ஈடழிய நோக்கி’ (171) இந்த உலாவில், தெரிவையைவிடச் சோழமன்னன் பத்துமடங்கு வேட்கை உடையவனகிருன். மதில்மடங்க மட்டித்த கோமானும் மானிற் பதின்மடங்கு வேட்கை பணித்தான் (335) குலோத்துங்க சோழன் மங்கையைவிட நூறு மடங்கு வேட்கை உடையவனகிருன். 'தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கை அடுத்த திருநோக் கருளா' (கு. உலா, 222) சங்கரசோழன் அரிவைக்கும் பேரிளம் பெண்ணுக்கும் மாலையை வழங்கியதாக இவ்வாசிரியர் பாடுகிரு.ர். 'ஆர்மாலை நிச்சம் அடும்ஆலை போய்ஒடுங்கக் கார்மாலை ஒதிக்குக் கைதந்தான். (300) செல்விக்குச், சூட்டினன் ஆரத் தொடலை. (385-6) இந்தக் கருத்தை இராசராச சோழனுலாவில் அரிவைப் பருவத் தில் ஒட்டக்கூத்தர் அமைத்திருக்கிரு.ர். ஆர்மாலை கோமான் அருளினுன்; அம்மாலை - கார்மாலை உட்கொண்டு கைக்கொண்டாள்.'" (308)