பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 27 அரசர் உலாவரும் போது பூரணகும்பம் வைத்துக் கமுகு, கரும்பு, வாழை முதலியவற்றை நாட்டுதலும் (106-7), பொன்னைத் தெருவிற் சிதறுதலும் (111). ஒற்றைச்சங்கு ஊதலும் (368), உறவினர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளுதலும் (181), தந்தையர் தம் புதல்வர் உச்சியை மோத்தலும் (54), நீரோடு பொன்னைத் தானம் வழங்குதலும் (49), மகளிருக்குத் திருமணப் பரிசாகத் தலைவன் தருவதை முலை விலை என்றலும் (140), ஆகிய வழக்கங்களை அங்கங்கே எடுத்துச் சொல்கிருர் இவ்வாசிரியர். அணிகள் இந்நூலில் ஆசிரியர் !_!6:) Qjö凸历卫ff了ā了 உவமைகளையும் உருவகங்களேயும் ஆளுகிரு.ர். சிலேடையணியும் சில இடங்களில் அமைந்திருக்கிறது. 'இசைத்தேன் பசைத்தேனை மாந்தி' (257) என்பதிலும் ஆர்மாலை நித்தம் அடு மாலை போ யொடுங்கக், கார்மாலே ஒதிக்குக் கைதந்தான் கூர் மாலை' (300) என்பதிலும் சொற்பின் வருநிலை உள்ளது. அரக்கிளவி நாயகனும் ஆணையாம் தேன, கரக்கிளவி நாயகனும் காப்பு' என்பதில் திரிபு அமைந்திருக்கிறது. இப்படியே பிற சொல்லணிகள் பொருளணிகள் அங்கங்கே விரவியுள்ளன. சொல் வழக்கு தூதுவனைச் சந்தன் என்பார் (17); யானையைக் கரிணி (66) என்பார். பூசக்ரம் , மாசக்ரம், சக்ரபரிபாலன், என்று வடமொழி வடிவத்தில் தொடர்களை ஆளுவார். சோளேந்திரன், சோளேசன் என்பவற்றில் வடமொழி மரபை மேற்கொள்வர். ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலாவைப் போலச் சொன்ன டையும் பொருளமைதியும் கற்பனை நயமும் அமைந்தது இந்த &_©üᎥᎢ என்பதை அவற்றைப் படித்து அறிபவர்கள் நன்கு உணரலாம். பதிப்பு இந்த உலாவின் கையெழுத்துப் பிரதி ஒன்று மகாமகோ பாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் தொகுத்து வைத்திருந்த நூற்கருவூலத்தில் இருந்தது. அது 29-1-1905 அன்று படி யேடுத்து நிறைவேறியதாகத் தெரிகிறது. அப்பிரதியில் தெரிவைப்பருவத்தில் 323-ஆம் கண்ணியின் முன்பாதிக்குமேல் சில கண்ணிகள் விடுபட்டுள்ளன. ஒலைச்சுவடியில் ஒர் ஏடு