பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3 சங்கர ராசேந்திர சோழன் உலா 56. சேய கவுரியற்குத் திங்கள் இரந்தாங்குத் தூய தரளத் தொடியூட்டி-நாயக 57. மாணிக்கச் செம்பூண் மரகதப்பூண் மார்புதோட் காணிப் பெயரழகிற் கைசாத்தி-மாணிக்கம் 58. நள்அமைத்த பச்சுதர பந்தத்தை நாபியின் உள்அமைத்த போதடைக் கொப்பாக்கி வெள்.அரவம் 59. ஏந்திய பார்அளந்த பாதத் தெறிகடற் காந்திய நீலக் கழல்வீக்கிச்-சாந்தும் 60. அகருவும் ஆரமும் தேனலர் அம்பொற் சிகரி விரைகமழச் சேர்த்திப்-புகர் இகந்த 56. சேய கவுரியற்கு - ஒட்டாமல் துார நின்ற பாண்டிய மன்னன் பொருட்டு. பாண்டியனுக்கு அருள் செய்யவேண்டுமென்று அவன் குல முதல்வகிைய சந்திரன் சோழன் கையைப் பிடித்து இரந்தது போல, முத்துக் காப்பைக் கையில் அணிந்து கொண்டான். தரளத்தொடிக் குத் திங்கள் உவமை. 56-7. நாயக மாணிக்கம் - தலை சிறந்த செம்மணி, மார்பு தோள் காணி பெயர் அழகின் - மார்பிலும் தோளிலும் அவற்றுக்கு உரிமையான, விட்டு விளங்கும் அழகுக்கு ஒப்ப, கைசாத்தி - கையில்ை அணிந்து. மாணிக்கப் பூணே மார்பிலும் மரகதப் பூணைத் தோளிலும் அணிந்து கொண்டான்; நிரனிறை. காணி உரிமை. பெயர் - மிளிரும்; விட்டு விளங்கும். - 58. நள் அமைத்த - நடுவிலே பதித்த பச்சுதர பந்தத்தை - பச்சை நிறமுடைய உதரபந்தம் என்னும் அணிகலன. உதர பந்தம் என்பது உடை நழுவாமல் வயிற்றின்மேல் கட்டும் அணிகலன. நாபியின் உள் அமைத்த போது அடைக்கு ஒப்பாக்கி கொப்பூழின்கண் பொருத்திய தாமரையோடு சேர்ந்த இல்ைக்கு ஒப்பாகும்படி செய்து. போது - தாமரை மலர். அடை - இலை. மாணிக்கத்துக்குத் தாமரை மலரும் உதரபந்தத்துக்கு அதன் இலையும் உவமை. இவனைத் திருமா லாக நினைத்துச் சொன்னபடி வெள் அரவம் - ஆதிசேடன். 59. எறிகடல் காந்திய அலே எறியும் கடலின் நிறத்தையுடைய. நீலக்கழல் - நீலமணிகள் பதித்த வீரக்கழல். விக்கி - கட்டி. இதுவும் சோழனைத் திருமாலாக வைத்துச் சொன்னபடி. சாந்தும் - சந்தனமும், 60. அகருவும் - அகிலும், ஆரமும் - மாலையும். தேன்.அலர் அம் பொற்சிக்ரி - வண்டு மொய்க்கும் மலர் மாலையை அணிந்த அழகிய மேருமலை போன்ற தோளில்; சிகரி : ஆகுபெயர். விரை - நறுமணம். புகர் இகந்த குற்றம் நீங்கிய.