பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 3 } 99. பன்மா டகயாழ்ப் பணிமொழியார் மாணிக்கப் பொன்மாட வீதிவாய்ப் போதுதலும்-மென்மாலை குழாங்கள் 100. சிந்தக் கலைந்த செழுங்குழல் மீன்உகுத்த அந்தக் கருங்கங்குல் ஆகியும்-தந்த 101. நிரையுடை அஞ்சனம் நீக்கும் கயற்கண் கரைஉடை வாரி கடுத்தும்-சரிஉடை 102. வீங்கிய முன்கை விசித்த திவவுபோய் நீங்கிய வீணை நிலைமலைந்தும்-பாங்கியர் 103. யாத்த மணிக்கச் சிகந்த முலைபுயங்கன் கோத்த பணம்அகன்ற குன்ருயும்-நீத்தன 99. மாடகம் - முறுக்காணி. யாழ் போன்ற பணிந்த மொழியை உடைய பெண்கள், - 100. மீன் - நட்சத்திரங்கள். கங்குல் - இரவு, மாலை சிந்திய கூந்தலுக்கு நட்சத்திரம் இல்லாத இரவு உவமை, 101. கரை உடை வாரி - கரை உடைந்த கடல், மையில்லாத கண்ணுக்குக் கரை இல்லாத கடல் உவமை, சரி உடை - வளைகள் உடைந்த, 101-2. சரி உடை முன்கை, வீங்கிய முன்கை எனக் கூட்டுக. சோழனைக் கண்டு பெற்ற உவகையால் மகளிர் உடம்பு பூரித்தது. விசித்த திவவு - கட்டிய நரம்புக்கட்டு. மலைந்தும் - ஒத்தும். வளை இல் லாத கைக்கு நரம்புக் கட்டு இல்லாத வீணை உவமை. 103. யாத்த - கட்டிய. இகந்த - நீங்கிய. புயங்கன் கோத்த பணம் அகன்ற குன்று . ஆதிசேடன் மூடிய படம் நீங்கிய மேருமலை, ஒரு சமயம் வாயு தேவனுக்கும் ஆதிசேடனுக்கும் போர் நிகழ, ஆதி சேடன் தன் படங்களால் மேருமலையை மறைத்தான்; வாயுவின் வலிமையினல் பின்பு படங்களை எடுத்தான். இந்த வரலாற்றை நினைந்து சொன்னது இது. கச்சு இல்லாத நகிலுக்கு ஆதிசேடன் படம் நீங்கிய மேரு உவமை.