பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சங்கர ராசேந்திர சோழன் உல: 16. தனிக்குடைக்கீழ் வாழத் தனித்தனி ஏழு பனிக்கடலும் பெற்றவா பாரீர்-கணிக்கிளவிப் 117. பல்ஆரம் ஒப்பீர்இப் பானுகுலப் புண்ணியம் எல்லாம்ஒன் ருய திவன்என்பார்-தொல்லைநாள் 118. அவ்வேந்தர் யாரும் ஒருதிவலை அத்திவலைக் கிவ்வேந்தன் பவ்வம்ஒர் ஏழென்பார்-தெய்விகத் 119. தன்னர்க்கு நாள்ஆய தத்தனையும் இத்தரணி மன்னற்கு நாளாக் வாழ்கென்பார்-மின்னர்க்குத் 120. திக்குக் கடப்பினும் இக்கோன் திருஅழகை மிக்குக் கடவா விழிஎன்பார்-வைக்கும் 121. அவனித் திகிரிக் கரிதிகிரி ஏந்தான் இவன்.இத் திகிரிதரித் தென்பார்-பவனிக்காய் 118 ஏழு கடலும் சூழ்ந்த இடமெல்லாம் சோழன் ஆட்சிக்குள் அமைந்ததாக எண்ணிப் பாடியது. வாழப் பெற்றவாறு. 116-7. கணிக்கிளவி பல் ஆரம் ஒப்பீர் - சொல் கணிக்கும் பல் முத்துக்கும் ஒப்பாக உள்ளவர்களே. ஆரம் - முத்து. பானுகுலப் புண் ணியம் எல்லாம் - சூரியகுல மன்னர்கள் செய்த புண்ணியப் பயன்கள் யாவும். 118. பழைய சோழ மன்னர் யாவரும் ஒரு துளியாகவும் அவர் களோடு ஒப்பு நோக்க இவன் ஏழு கடலாகவும் தோற்றுவான். பவ்வம் - கடல். தெய்விகத்து தெய்வத் தன்மையில்ை, 119. அன்னர்க்கு நாள் ஆயது அத்தனையும் அந்த மன்னர்களுக் குரிய வாழ் நாட்களாகிய அவ்வளவும். ஆயது : தொகுதி ஒருமை, மின்னர் - மகளிர், 120. விழி திக்கைக் கடந்து பார்க்கும் அளவுக்கு விரிந்தாலும் இவன் அழகை விட்டுக் கடந்து செல்லா. 121. அவனித் திகிரிக்கு பூமியாகிய வட்டத்தைக் காக்கும் பொருட்டு. அரி திருமால். திகிரி ஏந்தான் சச்கராயுதத்தை ஏந்த மாட்டான். இத்திகிரி - இந்த_ஆணைச்சக்கரம். இவன் சக்கர்வர்த்தி யாகி உலகத்தைக் காப்பதால் திருமால் சக்கரமேந்திக் காத்தல் தொழிலி னின்றும் ஒய்வு பெற்ருன் என்றபடி,