பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6 சங்கர ராசேந்திர சோழன் உலா 180. ஆளும் திருக்கண்ணும் ஆனனமும் செவ்வாயும் தாளும் கரங்களும்ஆம் தாமரையில்-கேளிர்போய் 181. மெய்க்குமெய் தம்மில் தழுவி விடுத்தாங்கு வைக்கும் உளமுளரி வாங்கினுள்-தைக்கும் 182. செயலைச் செயக்காமன் தீட்டிய வாளிப் - புயலைத் தொடைமடக்கிப் போனன்-அயல்அகலா 183, வண்டெடுத்த கையார் நடுக்கடற்பேர்ம் மாணிக்கம் கண்டெடுத்த தென்னக் களிசிறப்பார்-மண்டி 184. வெறித்த கடாவேழம் கைக்கொண்ட வேழம் பறித்த மகிழ்ச்சி பயப்பார்-பொறித்தழலிற் 180-81. தன் உள்ளத்தைக் கண் முதலியவற்றில் செல்லவிட்டு அங்கே தங்கி விடாமல் மீட்டுக் கொண்டாள். உறவினர்கள் ஒருவரை யொருவர் தழுவிக்கொண்டு பிரிந்தது போல இருந்தது இச்செயல். கண் பார்வையினலே பலவற்றைச் செய்பவளுதலின், 'ஆளும் திருக்கண்' என்ருர், கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும்' என்பது நீதிநெறி விளக்கம், 28. ஆனனம் - முகம், கேளிர்-உறவினர். தம்மின் மெய்க்குமெய் தழுவி விடுத்தது போல, உளமாகிய முளரி. 181-2. தைக்கும் செயலைச் செய- பிரயோகம் பண்ணிய இடத் தில் சென்று தைக்கும் காரியத்தை நன்கு செய்யும்பொருட்டு, வாளிப் புயலை - அம்பாகிய மேகத்தை மழை சொரிவது போலச் சொரிவதற் குரியதாதலின் புயல் என்ருர், தொடை மடக்கி-தொடுத்தலை மடக்கிக் கொண்டு. பெதும்பை காமம் சாலா இளமையளாதலின் காமனுக்கு அங்கே வேலை இல்லையாயிற்று. 183. வண்டு எடுத்த கையார் - வளைகளைத் தாங்கிய கைகளை உடைய மாதர்; இவர்கள் பெதும்பையுடன் வந்த தாய்மார்கள். நடுக்கடல் போம் மாணிக்கம் - நடுக்கடலில் வீழ்ந்த மாணிக்கத்தை. 184. வெறித்த கடா வேழம் - வெறிகொண்ட மத LIT&T. வேழம் பறித்த - கரும்பைப் பறித்து மீட்டுக்கொண்டதல்ை உண்டான. பயப்பார் - அடைவார். தழலின் - நெருப்பைவிட.