பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சங்கர ராசேந்திர சோழன் உலா தொண்ணுற்ருறு கோல ப்ரபந்தங்கள்’’ என்று சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில் வருகிறது. பிரபந்த மரபியல் என்னும் நூலில், 'பிள்ளைக்கவி முதல் புராணம் ஈருத், தொண்ணுரற் ருறெனும் தொகையதாம்’ என்று வருகிறது. பிரபந்தத்திரட்டு என்ற இலக்கண நூலில், 'தொண்ணுாற்ரு முன தொகைசேர் பிரபந்தம்' என்று வரு கிறது. ஆளுல் அவற்றில் சொல்லப் பெற்றுள்ள 96 வகைப் பிரபந் தங்கள் இப்போது இல்லை; குறைவாக உள்ளன. அவ்வளவும் இருந் தனவா என்பதே ஆராய்ச்சிக்குரியது. பிரபந்த இலக்கணங்களைக் கூறும் இலக்கணத்தைப் பாட்டியல் என்று சொல்லுவது மரபு. இப்போது கிடைக்கும் பாட்டியல் நூல் களில் பழமையானது பன்னிருபாட்டியல். காலத்தால் பிற்பட்டது இலக்கண விளக்கப் பாட்டியல். இவ்வாறு உள்ள பாட்டியல் நூல்களில் 96 பிரபந்தங்கள் என்ற வரையறை இல்லை. அந்தத் தொகையினும் குறைவாக உள்ளவற்றின் இலக்கணத்தையே அந்த நூல்கள் சொல் கின்றன. தெளிவாக இலக்கணம் வரையறுக்கப்பட்ட பிரபந்தங்களில் மிகப் பழங்காலந் தொட்டு வழங்கி வருபவை சில. ஆற்றுப்படை என்பது அத்தகையது. தொல்காப்பியத்தில் அதற்குரிய இலக்கணம் இருக் கிறது. பத்துப்பாட்டில் உள்ளவற்றில் ஐந்து ஆற்றுப்படைகள். கோவையும் ஆற்றுப்படைக்கு அடுத்தபடி பழமையுடையது என்று சொல்லலாம். மாணிக்கவாசகர் பாடிய திருச்சிற்றம்பலக் கோவை யாரும், இறையனரகப் பொருளுரையில் மேற்கோளாகக் காட்டப் பெறும் பாண்டிக் கோவையும் பழமையானவை. உலா உலா என்னும் பிரபந்தம் ஒன்பதாம் நூற்ருண்டில் முதல் முதலாக எழுந்தது என்று தோன்றுகிறது. அந்நூற்ருண்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள் நாயனர் பாடியருளிய திருக்கைலாய ஞான உலாவுக்கு ஆதியுலா என்றும் ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயரைக் கொண்டு உலாப் பிரபந்தங்களுக்கு அதுவே வழிகாட்டி என்று சொல்லலாம். - - . . . . - தொல்காப்பியத்தில் பாடாண் திணையைப் பற்றிய இலக்கணம் கூறும் பகுதியில் விரும், ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான' (புறத். 30) என்னும் சூத்திரத்தின் உரையில் நச்சிர்ைக்கினியர், 'பக்கு நின்ற, காமம் ஊரிற் பொது மகளிரோடு கூடி வந்த விளக்கமும் பாடாண்