பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சங்கர ராசேந்திர சோழன் உலா 222. மாதுப்பு வாயிர் மழைவழங்கத் தாங்குவது மூதுப்பு வெற்பு முழைகொலோ-மேதக்க 223. வானிற் படும்ஊழி ஆழி மறிப்பது தேனிற் படுவண்டற் சேதுவோ-கான்ஒத்த 224. செந்நெற் கவரத் திசையானே வந்தெய்தின் கன்னற் புறவேலி காவலோ-மன்னன் 225. கொடுத்த மயற்குக் குழிஇஎளியம் எல்லாம் தடுத்த புரவுத் தடையோ-தொடுத்த 226. விரைத்தார் இறப்பினும் வேண்டுதுமென் றீண்டி உரைத்தார் அயல்மற் ருெருத்தி-கரத்தினுல் 222. துப்பு - பவளம், முது உப்பு வெற்பு முழை - பழைய உப்பு மலையினுள்ளே உள்ள குகை. மழையால் உப்புக் கரைந்துவிடும். 223 , பிரளயகாலத்தில் பொங்கியெழும் கடலை மணல் விளை யாட்டில் மகளிர் அமைக்கும் அணையோ தடுப்பது? வானிற்படும் ஊழி ஆழி - மழையினால் உண்டாகிப் பெருகும் பிரளய கால்க் கடல். தேனின் படு - தேனின் இனிமை போல உண்டாகும்; இது விளையாட் டின் இனிமையைச் சொன்னபடி வண்டல் - மகளிர் விளையாட்டிடம். சேது - அணை. கான் ஒத்த காட்டைப் போல வளர்ந்த. 224. திசை யானை - அட்டதிக்கயங்கள், கன்னல் புறவேலி - கரும்பால் புறத்தே அமைத்த வேலி, கரும்பை யானை உண்டு பின் உள்ளே உள்ள நெல்லையும் உண்டுவிடும், 225. குழிஇ-கூடி புரவு பாதுகாப்பு. 226. விரைத்தார் - மணமுடைய மாலை. இறப்பினும் - முயற் சியிலே இறந்தாலும்; மன்னன் இவ்விடத்தைக் கடந்து சென்ருலும் என்றும் பொருள் கொள்ளலாம். ஈண்டி - கூடி. - பரிசனத்தார் (211), தரியாக் கருத்தாராகி (212), என்று ஏத்திப் பின்னரும் (220), என்று ஈண்டி உரைத்தார் (226) என்று கூட்டி முடிக்க.