பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சங்கர ராசேந்திர சோழன் உலா 293, கடல்போய்த் திருப்பாற் கடலைக் கலந்த அடல்போல் பிரான அடுத்தாள்-கொடைவேந்தும் 294. வண்ணத்து வல்லி படர வரஇருந்த அண்ணற் கடவுட்கா ஆயினன்-பெண்அணங்கும் 295. சூழிக் கடகளிற்றுத் தோன்றலைத் தன்விழி ஆழிக் கொருதிருமால் ஆக்கிள்ை-தாழார் 296. கருவைத் துடைத்தோனும் கட்டா மரைக்குத் திருவைத் திருவாய்த் திளைத்தான்-சரிவளைபின், 297, பாணிக் கமலமும் பார்த்தவன் கேயூர மாணிக்கம் நீலம் மலர்வித்தாள்-நீள்நிலத்தை 292-3. தேன் கடல் அரிவைக்கும் பாற்கடல் சோழனுக்கும் உவம்ை. இரண்டும் கலந்தால் இனிமை மிகுதியாகும். பாலொடு தேன்கலந் தற்றே (குறள்.) பிரான - சோழன. 294. வண்ணத்து வல்லி-அழகையுடைய காமவல்லியைப் போன்ற அரிவை. படர்வதற்காக வர, அதனை ஏற்றுக்கொள்ள இருந்த, அண்ணல் கடவுள் கா-தலைமை பெற்ற தெய்விகக் கற்பகம். கற்பகத்தில் படரும் கொடி காமவல்லி. அரிவையைக் காமவல்லியாகவும் சோழனைக் கற்பகமாகவும் உருவகம் செய்தார். - 295. சூழி-நெற்றிப் பட்டம். விழியாகிய கடலுக்கு. கண்ணிலே அவன் வடிவத்தை வைத்தலின் இவ்வாறு கூறினர், தாழார் - பகை வர்களுடைய. - . o - r 296. கருவைத் துடைத்தோன்-கருவும் இராதபடி துடைத்தவன், கண்ணுகிய தாமரைக்கு உரிய திருமகளாகக் கொண்டு அரிவையோடு கலந்தான். சோழன் தன் கண்ணில் அரிவையின் வடிவைப் பதித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். சரி வளை - சரியும் வளையும் அணிந்தவள்; அன்மொழித்தொகை: சரி- ஒருவகை வளை. 297. கையாகிய தாமரையையும் பார்த்துப் பிறகு அலனுடைய தோள் வளையில் உள்ள மாணிக்கத்தில் தன் கண்ணுகிய நீலோற்பல மலரை மலரச் செய்தாள். தோள் வளையைப் பார்த்தாள் என்று சொல்லியபடி, - - . . . . . -