பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆய்வின் ஒரு பகுதியாகச் சொல்லடைவுகள் உருவாக்கப்பட்டன. 1962-இல் புறநானூற்றுச் சொல்லடைவை வ. அய். சுப்பிரமணியம் உருவாக்கியதைத் தொடர்ந்து பதிற்றுப்பத்துக்கு எஸ். அகத்தியலிங்கமும் (1962) பரிபாடலுக்குச் சோ. ந. கந்தசாமியும் ( 1962 ) நற்றிணைக்கு ஏ. காமாட்சிநாதனும் (1964 ) பத்துப்பாட்டிற்கு இராம. சுந்தரமும் (1964) கலித்தொகைக்கு டி. ஆண்டியப்ப பிள்ளையும் ( 1970 ) அகநானூற்றிற்குச் ச. வே. சுப்பிரமணியனும் ( 1972 ) குறுந்தொகைக்கு எம். கலியபெருமாளும் (1974 ) ஐங்குறுநூற்றிற்கு எஸ். ஆர். கிருட்டிணம்மாளும் சொல்லடைவுகளை உருவாக்கியுள்ளனர். இவற்றில் புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றின் சொல்லடைவுகள் அச்சாகி வெளிவந்துள்ளன. இந்தச் சொல்லடைவுகளில்

patappai = side, C.C.
படப்பை = பக்கம் வே. தொ.
6-14 கா.கி.
98-20 ஒள.
126-23 மா.ந.
137-12 ஓ.பெ.
166-29 ஆமூ.
= garden, C.C.
= தோட்டம் வே.தொ.
375-10 உ.எ.மு
385-8 க.
399-11 ஐ.மு. (புறநானூற்றுச் சொல்லடைவு)
கால் leg C.C.
19-1,19-3)
C.B. 84-12,88-9
wind, S.
15-6,17-12,25-6.
C.B. 41-25,63-17
root, C.C. 40-17,61-6
C.B. 30-15
Infantry, S. 33-11
Throwing R.P.B.88-18 (பதிற்றுப்பத்துச் சொல்லடைவு)


எனப் பதிவுகள் இலக்கணக்குறிப்பு, பொருள், வருகையிடங்கள் ஆகியவற்றுடன் தரப்பெற்றுள்ளன. புறநானூற்றுச் சொல்லடைவில் ஆசிரியர்பெயர் குறுக்கங் களும் (வருகையிடங்களை அடுத்து உ. எ. மு., ஐ. மு. என உள்ளவை) தரப்பெற்றுள்ளன.

1996-இல் என். சுப்பிரமணியன் உருவாக்கிச் சென்னைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பெற்ற Pre-Pallavan Tamil Index ( Index of Historical Materials in Pre-Pallavan Tamil Literature - இல் சங்க இலக்கியச் சொற்களும் சேர்த்துத் தரப்பெற்றுள்ளன. இந்தச் சொல்லடைவில் சொற்கள்

iv