பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/19

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதி, 28-10, மருங்கூர்ப்ப ட்டினம் - நற். 258-10, அக. 227-20 என்பன தொடு, கலம்; மான, விறல், வேள்; நிறை, போய் பேர், யாற்று; மா, இலங்கை; மருங்கூர், பட்டினம் எனத் தனித்தனிச் சொற்களாய்த் தரப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் எல்லாம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 1987-ஆம் ஆண்டுச் சொல்லடைவில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவை செம்மைப்படுத்தப்பட்ட இந்தச் சொல்லடைவில் திருத்தப் பெற்றுள்ளன.

இந்தச் சொல்லடைவிற்கு மர்ரே எஸ். ராஜம் பதிப்பு மூலமாய்க் கொள்ளப்பட்டாலும் இந்தப் பதிப்பில் விடுபட்டுள்ள வரிகளைச் சேர்க்க ஔவை சு. துரைசாமிப்பிள்ளையின் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் புறநானூற்றுப் பதிப்பு துணையாகக் கொள்ளப்பட்டது. கழகப் பதிப்பில் உள்ள வரிகள் பல்வேறு ஓலைச் சுவடிகளையும் பார்த்துச் சேர்க்கப்பட்டவை என ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை கூறுவதால் அந்த வரிகள் இந்தச் சொல்லடைவிற்கான தரவுமூலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்தச் சொல்லடைவு அகராதி உருவாக்கத்திற்கான தரவு என்பதால் இவ்வாறு விடுபட்ட வரிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இதனால் இந்தச் சொல்லடைவிலும் அந்த வரிகளில் உள்ள சொற்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சொல்லடைவின் ஒவ்வொரு பதிவும் சொல், மொத்த வருகையிட எண்ணிக்கை, நுால்கருக்கம், பாடல் எண், வரி எண்களோடு கூடிய வருகையிடங்கள்

முருகு_(29) திரு.244; மது.38, 181, 611, 724; பட்.37; நற்.34-11, 47-10, 82-4, 225-1; குறு.362-1; ஐங்.245-3, 247-3, 249-2, 308-4; பதி.26-12; பரி.8-65, 21-51; அக.22-11, 286, 118-5, 137-8, 138-10, 181-6, | 232-14, 272-13, 288-4; புற.56-| 14, 259-5 பதிவுச்சொல் வருகையிடங்கள் மொத்த வருகையிடங்கள்


என்ற அமைப்பில் அமைந்துள்ளன. முதலில் பத்துப்பாட்டும் பின்னர் எட்டுத் தொகையும் என வருகையிடங்கள் அமைந்துள்ளன. பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை தொடங்கி மலைபடுகடாம் வரையிலும் எனப் பத்துப்பாட்டின் பாடல் வரிசைமுறையிலும் எட்டுத்தொகைகளில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற வரிசையிலும் சொற்களின் வருகையிடங்கள்

xiii