பக்கம்:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf/7

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை

காலந்தோறும் சங்க இலக்கியச் சொல்லடைவு

சங்கஇலக்கியத்திற்கான நோக்குநுால்களில் சொல்லடைவும் ஒன்று. சங்கஇலக்கியச் சொல்லடைவுகள் 1. குறிப்பிட்ட சொற்களையும் அவற்றின் பொருளையும் வருகை இடத்துடனோ நுாலின் பக்க எண்ணுடனோ தருவன, 2. சொற்களையும் அவற்றின் வருகையிடங்களையும் தருவன, 3. குறிப்பிட்ட நூலில் அல்லது நுால்களில் உள்ள எல்லாச்சொற்களையும் அவற்றின் எல்லா வருகையிடங்களையும் இலக்கணக்குறிப்பு, சொற்பொருள் ஆகியவற்றுடன் தருவன என மூன்றாய் வகைப்படுகின்றன.

1. சங்கநூல் பதிப்புகளின் பின்னிணைப்பாக அருஞ்சொற்பொருள் அகராதியாய் இடம்பெறுவன முதலாவது வகையுள் அடங்குகின்றன. 1894-இல் வெளிவந்த புறநானூற்றுப் பதிப்பில்

அகம் - உள் 'கானக நாடனை' ரு
அகல் - நீங்க மீன்றிகழ் விசும்பிற் பாயிருலகல' உரு
அகழ் - கிடங்கு ‘ பாருடைத்த குண்டகழி' கச

எனச் சொல், பொருள், பாடல்தொடர் என்ற அமைப்பில் அரும்பத அகராதி ஒன்று தரப்பெற்றுள்ளது. 1918-இல் வெளிவந்த பத்துப்பாட்டுப் பதிப்பில் அரும்பதவிளக்க அகராதியும் ( பக்.505-533 ) அருந்தொடர் அகராதியும் ( பக். 533-540 ) இடம்பெற்றுள்ளன. அரும்பத விளக்க அகராதியில்

அகநாடு - உள் நாடு; மது. 149
அகளம் - நீர்ச்சால்; மலை. 104; பத்தர், தாலி போலப்
புடைத்திருத்தலின்; சிறு.224

எனச் சொற்பொருளும் சொல்லின் வருகையிடமும் தரப்பட்டுள்ளன. அருந்தொடர் அகராதியில்

அகலிருவானம் - மது. 267;
அகலிருவிசும்பு - பெரு.1;
அசைவுழியசைஇ - பெரு.44;
அஞ்சுவருபேய்மகள் - திரு.51;

எனத் தொடர்களும் பாடல்வரிகளும் தரப்பட்டுள்ளன.

1931-இல் வெளிவந்த இ. வை. அனந்தராமையரின் கலித்தொகைப்