பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 . சங்க இலக்கியத்தில் உவமைகள்

இக்கருத்துப் பல்கிய வழக்காக உள்ளது பாவை என்று கூறும்பொழுது கொல்லிமலை இடச்சார்பு பெறுவது இயல்பாகி விட்டது:

பெருபூண் பொறையன் பேஎம்முதிர் கொல்லிக்

கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய

நல்லியம் பாவை அன்ன இம்

மெல்லியல் குறுமகள். -குறு. 89|4-7

1.9. சொற்றொடர் பயின்று வரல்

சங்க இலக்கிய உவமைகளுள் உவமைப் பொருளே அன்றி அவற்றை உணர்த்தும் சொற்றொடர்களும் பயின்று வருகின்றன. இவை அக்காலத்தில் புலவர்கள் பயின்று வந்த உவமைகள் என்பதைக் காட்டுகின்றன. மொழியில் சொற. கம் தொடர்நிலைகளும் ஒரு குறிப்பிட்ட காலத்து வ. ம் மக்களுக்கும் புலவர்களுக்கும் பொதுமையாக அமைதல் பே, ல இவ் உவமைகளும் பொதுமை நிலைபெற்று வழங்குகின்றன. பழமொழிகளைப் போல இவ் உவமைகளும், பயின்றுவரும் சொற்றொடர்களைக் கொண்டு இயங்கி வந்தன என்றும் தெரிகிறது. அக்காலத்திற்கே உரிய பொது உவமைகள் பல உள்ளன என்பது அறியப்படுகிறது. சங்க இலக்கியம் என எட்டுத் தொகையையும் பத்துப்பாட்டையும் ஒன்று சேர்த்துக் கூறுவதற்கு அவற்றிற்குக் காரணமாக மொழி நடையையும், கருத்து ஒற்றுமையையும் காட்டுவர். அவற்றோடு உவமச் சொற்பொருள் ஒற்றுமையையும் ஒரு காரணமாகச் சேர்த்துக் கூறலாம்.

பல தொடர்களுள் ஒற்றுமை காணப்படுகின்றது. சொல்லும் பொருளேயன்றித் தொடர்களும் பல ஒற்றுமைபட்டு விளங்குவதால் கீழ்வரும் இவ் உவமைகளைப் பலரும் எடுத்தாளும் பொது உவமைகள் எனக் கொள்ள வேண்டி உள்ளது.

பயின்றுவரும் தொடர்கள் பின்வருமாறு

1. அமிழ்துபொதி துவர்வாய்: பதி. 16/19:51/21. 2. அமைத்தோள்: அக. 390/10; நற் 352/10-11; 390/10.

1. குறு. 100/5-6. - 2. குறு. 89/4-7; 100/5-6; அகம். 62/12.41, 209/10-17;

நற். 185/6-11; 192/8-12.