பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சங்க இலக்கியத்தில் உவமைகள்

சேற்றுவளர்தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலரின் நிரைகண் டன்ன வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந்தோரை எண்ணுங் காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே. -புறம்.27/1-6

இஃது உலகில் அனைவரும் தெரிந்து தெளிய வேண்டிய உண்மையாகும். தாமரையினுடைய தோற்றமும் வளர்ச்சியும் விளக்கமும் அழிவும் வாழ்க்கையின் விளக்கமாகக் காட்டப் பட்டுள்ளன. -

1.6.2. அரசியல்நெறி வாழ்வார் எவ்வாறு குடிமக்களை நடத்தவேண்டும் என்பதற்கு ஒர் நிகழ்ச்சி உவமையாகத் தரப் பட்டுள்ளது. காய்ந்து முற்றிய நெல்லை அறுத்துக் கவளம கவளமாக யானைக்கு உண்ணத்தந்தால் மா அளவள்ளநிலத்தில் விளைவதும் பல நாளுக்கு உணவாக அமைந்து பயனைத் தரும். நூறு வயல் அளவுள்ள நிலமாயினும் யானை தானே சென்று புகுந்து னடால் பாழ்படுத்துவதே மிகுதியாகும். இஃது உவமையாக அமையும் தொடர் நிகழ்ச்சி. இஃது உவமைக் கதையாக நின்று நீதியை உணர்த்தும் நிகழ்ச்சிகளைத் தாங்கி யுள்ளது. அறிவுடைய வேந்தன் நெறியறிந்து மக்களிடம் பொருளைப் பெறுவானேயாகில் மிக்க பொருளைப் பெறு வதோடு நாடும் நன்கு செழிக்கும். கீழ்மக்களோடு சேர்ந்து அன்பும் பண்பும் கெட மக்களிடை வற்புறுத்திப் பொருள் கொண்டால், யானை புகுந்த புலத்தைப் போலத் தானும் பயன்பெறான்; உலகமும் கெட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்; நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியல் கிழவனாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

புறம்.184/1-11