பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 11

12.1. அந்தாதி உவமை

அந்தாதி உவமை வேறு: மாலை உவமை வேறு எனப் பிரித்து உணரப்படுகின்றன. அந்தாதி உவமை என்பது உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமமாக்கியும் இயைபுபடுத்தித் தொடுப்பது என்பர்.1 மற்றும் மாலை உவமை என்பது உவமச் செய்திகளுள் தொடர்ச்சி உண்டாகும்படி மாலை போலக் கருத்துத் தொடர்புபட அமைப்பது என்பர்.

12.1.1. சிறுபாணாற்றுப்படையில் இவ்வந்தாதி உவமை சிறப்பிடம் பெற்றுள்ளது.

நெய்கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பென மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன் மயில்மயில் குளிக்கும் சாயல் சா அய் உயங்கு நாய்நாவின் நல்லெழில் அசை இ வயங்கிழை உலரிய அடியின் அடிதொடர்ந்து ஈர்ந்து நிலம்தோயும் இரும்பிடித் தடக்கையின் சேர்ந்துடன் செறிந்த குறங்கின் குறங்கென மால்வரை ஒழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந்த ஓதி ஓதி நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக் களிச்சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்குபிதிர்ந்து யானர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப் பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின் இன்சேறு இகுதரும் எயிற்றின் எயிறென.

-பத். 3/14.28

கதுப்பு என்ற உவமை மீண்டும் பொருளாகியது. இவ்வாறே சாயல், அடி, குறங்கு, வாழை, ஒதி, சுணங்கு, முலை, எயிறு முதலிய உவமைகள் பொருள்களாக அமைக்கப்பெற்று ஒரு தொடர்பினைப் பெற்றுள்ளது.

12.1.2, இவ்வாறே கலித்தொகையில் அந்தாதி உவமைக்கு மற்றும் இரண்டு சான்றுகள் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு:

1. மாறன், பக். 151 2. தண்டி சூ. 32; உரை பக். 52. மாறன் உ ரை பக். 140