பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 149

தெரிகிறது. ஒட்டகம் ஒரே ஒர் இடத்தில் மட்டும் உவமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அசுணம் என்னும் விலங்கு யாழொலி கேட்டு மயங்கும் இயல்பினது என்றும், பறை ஒலி எழுப்பி அதனை வேட்டுவர் கொல்லுவர் என்றும் கூறப்படுகிறது.

பறவைகளுள் மயில் மிகுதியான இடம் பெறுகிறது." இதனை அந்த நாட்டு அடையாளப் பறவைக்கு உரிமை பெறுகிறது என்பதற்கு வேண்டிய தலைமையும் சிறப்பும் அளித்திருக்கிறார்கள் என்று கூறலாம்.

அன்றில் பறவையும்" மகன்றில் பறவையும்’ உவமைகளாக வந்துள்ளன. பிரிவுத் துன்பத்தை உணர்த்த அன்றில் பறவையும், புணர்வு இணைப்பை உணர்த்த மகன்றில் பறவையும் உவமையாயின. அன்றில் என்பது பனைமரத்தில் வாழும் பறவை; மகன்றில் என்பது நீர் வாழும் பறவை; அன்றில், மகன்றில் ஆகிய இவையிரண்டும் இரு வேறு பறவைகள் என்பது தெரிகிறது. கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் அவற்றிற்கு விளக்கமாக அமைந்துள்ளன.

மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில் நன்று அறை கொன்றவர் அவர்எனக் கலங்கிய என் துயர் அறிந்தனை நரறியோ எம்போல இன்துணைப் பிரிந்தாரை உடையையோநீ

கலி. 128/8-11.

1. பத். 3/154-155. 2. நற். 304/8-10, கலி. 143/10-15. 3. நற். 22/1-7; 115/5; 222/3-6; 248/7-9; 262/1-2, 264/4-6, 265/7-9;

301/4; 305/2. குறு.2/3, 138/3, 184/5, 225/6-7, 244/4-6, 247,2-3; ஐங். 258/2, 393/4. பரி. 9/56, 9/64, 11:41, 19/6-7, 20/69. கலி. 57/2, 30/6; 103/59; 103/38; 128/16; 137/6-7, அகம். 63/15, 158,5; 198/6-8; 369/4-5; 385.1. புறம். 120/6-9, 146/8.9, 252/4-5; 318/2; 373/10-12, 395/13. பத் 1/205, 3/16, 3/165; 2/47; 6/418, 6/608, 6/706, 8/169; 9/149. நற் 124/1-2 குறு. 160/1-2, கலி. 129/12-15. ஐங் 381/4-5, குறு 57/1-3, பரி. 8/43-44 அகம் 220114-15. மேல் அடிக்குறிப்பு 260. மேல் அடிக்குறிப்பு 261.