பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சங்க இலக்கியத்தில் உவமைகள்

1.3.1.5. பாவை என்பது பொதுப்படையாகக் கூறப்பட்ட போதும் அவர்கள் போற்றி மதித்த பாவை கொல்லிப் பாவை யாகும் என்பது தெரிகிறது. சேரநாட்டைச் சார்ந்த கொல்லி மலையில் எழிலும் கவர்ச்சியும் அழகிய வடிவும் பொருந்திய பாவைத் தெய்வமே வந்த தீட்டியது என்னும் கருத்து வற் புறுத்தப்படுகிறது. மற்றும் பாவை என்பது பொற்பாவையைக் குறிக்கும் என்பதும் தெரியவருகிறது.

1.3.2. உவமச் செய்தியில் அப்புலவர்களின் இசைத் திறனும், கூரிய உணர்வும் புலப்படுகின்றன. யாழும் குழலும் அவர்கள் போற்றிய இசைக் கருவிகளாகும். யாழ் மகளிரின் இனிய கிளவிக்கும், குழலோசை அவர்களின் அழுகுரலுக்கும் உவமையாயின என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

யாழ் மகளிரின் இனிய சொற்களுக்கு உவமையாதல் கீழ்வரும் சான்றுகள் காட்டும்.

யாணர் நரம்பின் இன்கிளவியளே -ஐங். 100/4

நரம்பார்த் தன்ன தீங்கிளவியளே -ஐங். 185/4

செவ்வழி யாழ்நரம் பன்ன கிளவியார் -கலி. 118/12

- - - - + a + е в в. в + в + நல்யாழ்

நரம்பிசைத் தன்ன இன்திங் கிளவி -அகம். 109/1-2

வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே -அகம். 143/26.

மகளிர் அழுகுரலுக்குக் குழலிசை உவமையாதல்.

கீழ்வரும் சான்றுகளால் புலப்படுகின்றது.


ஆம்பலங் குழலின் ஏங்கிக் கலங்களுர் உறுவோள் புலம்புகொள் நோக்கே

-நற்.113/1112

1. நற் 185/6-11; 19218.12, 201/7-12, 252/6-7; 308; 7-8; 319/7-8; 362/1-2; குறு. 89/4-7; 100/5; அகம். 62/13-14; 209/10-17.

2. நற். 185/6-11; 192/8-12, 204/7-12; குறு. 89/4-7; அகம். 62/13-16;

209/10-11.

3. அகம் 392/6-7; பத் 6/410-412.