பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் மரபுகள் 169

1.5.8. இராமாயணக் கதைகளுள் குரங்குகள் சீதையின் நகைகளை மாறி அணிதலும், ஆலமரத்து நிழலில் இராமன் தன் நண்பர்களோடு இருந்து கலந்து ஆலோசித்தலும் உவமைகளாக இடம் பெறுகின்றன.

1.5.9. அரவு வாய்ப்பட்ட மதி மிக்கு உவமையில் இடம் பெறுகிறது. அதனை மறுப்பட்ட திங்கள் என்று கூறுவர். இக்கருத்துச் சங்க இலக்கியத்தில் மிகுதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்."

1.5.10. துறக்கம் என்ற கற்பனை அவர்கள் உவமையில் இடம் பெற்றிருந்தது. துறக்கம்' நாகர் மண்டிலம்." புத்தேள் உலகம், நிரையம் முதலிய செய்திகள் இடம் பெற்றன.

1.5.11. புராணக் கதைக் குறிப்புகள் பல உவமையில் இடம் பெற்றிருந்தன என்பதும், தெய்வங்களின் நிலையை மாந்தர் பெறவேண்டும் என்ற விருப்பு இருந்தது என்பதும் தெய்வச் செய்திகள் உவமைகளில் இடம் பெற்றிருந்த மிகுதி யால் தெரியவருகின்றன. வீரமும் புகழும் மிக்க மன்னர்களின் வரலாறு உவமைகளில் இடம் பெற்றிருந்ததைப் போல அக்காலத்து மக்கள் செவி வழியாகக் கேட்டு வழி வழியாகப் போற்றி வந்த இதிகாசப் புராணக் கதைகள் உவமைகளில் சிறந்து விளங்கின.

சங்க இலக்கியப் பொருள் மரபுகளில் இயற்கை, கலை அகப்புற வாழ்வியல்,நீதிகள், தெய்வச்செய்திகள் என்று பிரித்து அறியத்தக்க வகையில் சிறப்புச் செய்திகள் அமைந்துள்ளன என்பது மேலே காட்டப்பட்டது. இவ் உவமைகள் குறிப்பிட்ட பொருள் மரபுகளைக் கொண்டிருந்தமையை நோக்க அவை அக்காலப் புலவர்கள், மக்கள் மன நிலையோடு ஒத்து இயங்கத் தம் கருத்துகளைப் புலப்படுத்தினர் என்பதைக் காட்டுகின்றன. எனவே, சங்க இலக்கிய ஒருமைப்பாட்டுக்கு இவ் உவமை மரபுகளின் ஒருமைப்பாடும் ஒரு காரணமாக விளங்குகிறது என்று முடிவு கொள்ளலாம்.

1. பத் 3/28240. 2. கலி 104/5759; 101,3032; பத் 4/415:23,

3. கலி 134/14; அகம் 59/49:புறம் 174/110.1. பதி 14/7

4. அகம் 70/1314: புறம் 378/1112

5. நற் 377/68; குறு 43/46; பரி10/7376: கலி 105/4246, அகம் 116/16:

313/7.

6. பரி இணை 1/49; பத் 9/104.111; 4/3883 9. 7. புறம் 367/1.