பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 27

'நெற்றி வியத்தற்குரிய அளவில் தேய்ந்து சிறுகி உள்ளது. அதனால் இது பிறைமதி அன்று முகத்தில் மாசு ஒன்றும் இல்லை. அதனால் அது முழுமதி அன்று தோள்கள் மூங்கிலை ஒத்து உள்ளன; எனினும் மூங்கில் தோன்றும் இடமாகிய மலை அங்கு இல்லை; கண்கள் பூவினை நிகர்த்து உள்ளன, எனினும் அப்பூக்கள் பூக்கும் சுனை அங்கு இல்லை; அவள் மெல்ல நடக்கின்றாள் எனினும் அவள் மயில் அல்லள்; குழைந்து பேசுகின்றான், எனினும் அவள் கிளி அல்லள்,' என்று மறுப்புக் கூறிப் பழகிய உவமைகளை விலக்கி அவள் உயர்வை நிலைநாட்டுகின்றாள். இதில் வியப்புச் சுவை மிகுதி யாக உள்ளது. இதனை மருட்கை உவமை என்றும் கூறலாம்.

நில்என நிறுத்தான் நிறுத்தே வந்து நுதலும் முகனும் தோளும் கண்ணும் இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ ஐதேய்ந்தன்று பிறையும் அன்று; மை திர்ந்தன்று மதியுமன்று; வேயமர்ந்தன்று மலையும் அன்று: பூவமர்ந் தன்று சுனையும் அன்று; மெல்ல இயனும் மயிலும் அன்று: சொல்லத் தளரும் கிளியும் அன்று. - கலி. 55/6-14

12.7.2. பாரியை உயர்த்தி உலகம் புகழ்கிறது. எனினும் மாரியும் உண்டு இவ் உலகைப் புரக்க என்னும் கருத்தும் புறநானூற்றில் வருகிறது. இதனை நிந்தை உவமை என்று கூறலாம். தண்டியலங்காரம் இப்பாடலை விலக்கணிக்கு எடுத்துக் காட்டாகத் தருகிறது என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.'

பாரிபாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டுஈங்கு உலகுபுரப் பதுவே. -புறம். 107-4

12.8 ஐய உவமை அல்லது மருட்கை உவமை

ஒன்றுக்கு மேற்பட்ட உவமைகளைக் கூறி இவற்றுள் எது பொருந்தும் என்ற ஐயத்தை எழுப்புவதும், உவமைபையும்

1. தண்டி. சூ. 43