பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 95

பருந்தின் சிறகுகள் தக்க உவமையாகும். கான யூகம் என்னும் புல், வேனில் காலத்து அணிலின் நிமிர்ந்த வாலுக்கு உவமை யாகும். மாரிக்காலத்து ஆம்பல் முகை, கொக்கின் அலகுக்கு உவமையாதலும் பொருந்திய செய்தியாகும். இவ்வாறே ஏனைய உவமப்பொருள்களும் காலத்தோடு தொடர்புபடும் பொழுது அவை தனித்தன்மைகள் பெறுகின்றன. அவையே உவமையாதலுக்குப் பொருந்துவனவும் ஆகும். எனவே, காலத்தோடு சார்த்திக் கூறும்பொழுது உவமைகள் பொருத்தம் பெறுதலோடு தனிச்சிறப்பும் பெறுகின்றன.

1.8.3.0. இடத்தோடு சார்த்திக் கூறல்

புலவர்கள் தாம் நேரிற் கண்ட காட்சிகளை உவமையாக அமைத்தாலும், இடத்தோடு நெருங்கிய தொடர்பும் அப் பொருள்களுக்கு இயல்பாக அமைந்திருந்தாலும், அப்பொருள் களின் சிறப்பு இடத்தோடு சார்த்திக் கூறுப்படுவதாலும் இம்மரபு அக்காலத்தில் ஏற்பட்டது. அப்பொருள்களுள் ஒரு சில இருக்கும் இடம், அவர்கள் போற்றும் வள்ளல்கள் வாழும் இடமாகவும் இருந்துள்ளன மற்றும் புலவர்கள் நெருங்கிப் பழகும் இடங்களாக இருந்தாலும் அவை பொருளோடு சார்பு பெற்றுள்ளன.

1.8.3.1. கொற்கை முத்து

கொற்கையில கிடைக்கும் முத்து மிக உயர்ந்த முத்தாகக் கருதப்பட்டது. ஏனைய சாதாரண முத்துகளை விடக் கொற்கை முத்தே அவர்கள் காலத்தில் போற்றப்பட்டது என்று தெரிகிறது. அக்கொற்கை பலரும் போற்றிய ஊராகத் தெரிகிறது.

மகளிரின் பற்கள் முத்துகளுக்கு உவமைப் படுத்தப் படுகின்றன. கொற்கை முத்துகள் மிக உயர்ந்தனவாகக் கருதப் பட்டன. ஆதலின் அம்முத்துகள் கொற்கைத் துறையோடு இடச்சார்பு பெற்றன.

அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறுகெழுதுவர்வாய்.

-ஐங். 185/1-2

கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன நகைப்பொலிந்து இலங்கும் எயி கெழு துவர்வாய்.

-அகம். 27/7-8