பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புதுமைக்குக் காரணம்! அஞ்ஞான்று சிலர் "சான்றீர்" யாங்கள் உங்களை நெடுங்காலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். யாங்கள் சின்னஞ் சிறுவராயிருந்த காலத்தே உங்கள் புகழ் எம் செவிகளில் விழுந்ததுண்டு. அவ்வாறாயின் உங்களுக்கு ஆண்டு பலவாகி இருக்க வேண்டுமே. அப்படியாயின் உங்கட்கு நரைதிரை ஏற் பட்டிருக்க வேண்டுமே. அவை சிறிதும் உங்களிடம் காணப்படவில்லையே. இந்தப் புதுமைக்குக் காரணம் யாது என்று ஆவல் துடிக்க வினவினார்கள். நமது பெரியாரிற் பெரியாரான சான்றோர் தமது நீடித்த வாழ்நாளில் நுண்ணிய பல அனுப் வங்களை தெள்ளிதில் கண்டார். தமிழ் இலக்கியங் களை எழுத்தெண்ணக் கற்றவர். தமிழ்ப் பண் பாட்டில் ஊறித் திளைத்தவர். தமிழர் கண்ட உண்மைகளையும், இதரர் கண்ட உண்மைகளையும், சுருங்கச் சொன்னால் அக் காலம் கண்ட உண்மை களைத் துணிந்து அறிந்து அமைந்தவர். வாழ்வின் இளமைக்கும் முதுமைக்கும் ஆணி வேர் எது என்பதை தெள்ளத்தெளிய அறிந்தவர். பொதுவாக மக்களுக்கு ஆண்டுகள் பல ஆக ஆக நரையும் திரையும் வந்து தழுவுகின்றன. என்றும் இளமையாயிருக்க எல்லோரும் விரும்பு கிறார்கள். முதிய வயதில் நரை திரை இல்லாது காட்சியளிப்பவரைக் காண்பதுதான் அரிது. ய இயல்பான வழி அழகும் இளமையும் அடைய அவா மிக்கு, சிலர் தப்பும் தவறுமான வழிகளில் வீண் முயற்சி செய்து "உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா’ என்றாகி விடுகிறார்கள். காயகற்பம் தேடுகிறார்கள். சிங்கக் குட்டியை வென்ற சிட்டுக்குருவி இலேகி 10