பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவர்தான் சங்ககாலப் பெருஞ்சான்றோரான பிசிராந்தையார். அவர் பாடிய பாடல் பின் வருமாறு: "யாண்டு பலவாக நரையில ருகுதல் யாங்காகியிர்? என வினவுதிர் ஆயின் மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம் பினர்; யான் சண்டனையர் என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான்; காக்கும்; அதன் தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே." புறநானூறு-91. . (இதன் பொருள்: ஆண்டு பல ஆகி முதுமையடைந்த பிறகும், நரை திரையின்றிக் காணப்படுகிறீரே, இதற்கு என்ன காரணம் என்றுகேட்க, எனது வாழ்க்கை மேம்பட்ட வாழ்க்கை. எனது மனைவியும் மக்களும் குணத்திலும் அறிவிலும் மிக்கவர்கள். எனது பின் தோன்றல்களும் ஏவலாளரும் எனது கருத்துக்கு இணக்கமான கருத்தும் நடப்பும் உடையவர்கள். எங்கள் அரசன் நீதிக்குப் புறம்பாக எதையும் செய்ய மாட்டான். சண்ணை இமை காப்பதுபோல் மக்களைக் காப்பான். எனது ஊர் சான்றோர் கள் நிறைந்த ஊர். அறிவுச் செறிவும் புலனடக்கமும் அருள் வாழ்வும் வாய்க்கப் பெற்றவர்கள் அவர்கள். ஆகவே நரை திரை தோன்ற வில்லை என்று கூறினார். 13