பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெளிந்த எண்ணற்ற சமுதாயக் காட்சிகளை நமக்கு அருமையருமையாகப் படம் பிடித்துக் காட்டு கிறான். அந்தக் காட்சிகளில் "உள்ளியதெல்லாம் உயர்வுள்ளும்" மனிதனின் சிந்தனைச் சிகரத்தைத் தொடும் காட்சியைக் காட்டுகிறான்: தலைவனும் தலைவியும் இல்லறத்தில் இணைந்தார் கள்; தேனும் பாலும் கலந்த வாழ்வில் இன்பக் கடலாடினார்கள்; ஒரு விநாடியில் ஒரு யுகத்தைச் சுவைத்தார்கள்; இருவருந்தான் உலகமென வாழ்ந் தார்கள். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடியும் திண்டோள னும் மாறிமாறிக் கண்டார்கள். அடுத்த படி ஏறினார்கள். குழலையும், யாழையும் கசந்து போகும்படிச் செய்த மழலைச்சொல் செவிமடுத்துப் பரவசமடைந் தார்கள். இந்தத் தாயும் தந்தையும் மக்கள் மெய் தீண்டி உடலின்பத்தையும் மற்று அவர் சொற் கேட்டு செவியின்பத்தையும் வாழ்வு நிறைய நுகர்ந் தார்கள். குழந்தைகள் கட்டிளங் காளைகளாகவும், நங்கை நல்லாராகவும் வளர்ந்து, நிமிர்ந்து, இல் லறத்தில் ஈடுபட்டார்கள். பெற்றோர்களைப் பேணிக் காத்தார்கள். "மூவா மருந்து" போன்று 'ஏவா' மக்களாகத் திகழ்ந்தார்கள். பெற்றோர்களின் முதிர்ந்த வாழ்க்கைக்குக் கற்கோட்டையும், இரும் புக் கதவுமாக விளங்கினார்கள். இத்தகைய புதல்வர், புதல்விகளோடு அளவளாவி மகிழ்ச்சிப் பெருக்கில் மிதந்து பூரித்தார்கள். இதற்கும் அடுத்த படியில் ஏறினார்கள். சுற்று முற்றும் தழைத்துச் செழித்துக் கிளைத்த சுற்றத்தார்கள். இந்தச் செழுங்கிளைகளை இவர்கள் 6