பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

புன்னை
கலோபில்லம் இனோபில்லம்
(Calophyllum inophyllum,Linn.)

குறிஞ்சிப் பாட்டில் ‘புன்னை’ ‘கடியிரும்புன்னை’ (93) எனப்படும். நூற்றுக்கணக்கான பாடல்களில் ‘புன்னை’ குறிப்பிடப் படுகின்றது. இது ஓர் அழகிய சிறுமரம். கடலோரப் பகுதியான நெய்தல் நிலத்தில் மிகுதியாக வளரும். இதன் அரும்புகள் வெள்ளிய முத்தை ஒத்தவை. மலரில் நறுமணம் மிகுதியாக வெளிப்படும். புன்னையைப் பற்றிய செய்திகளும் அங்ஙனமே மலிய வெளிப்பட்டுள்ளன. இப்பழந்தமிழ் மரத்தைத் ‘தமிழ் நாட்டிற்குரிய மரமன்று போலும்’ என்று காம்பிள் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்று உடனடியாக ஆய்தற்குரியது. தாவரவியல் அடிப்படையில் மறுத்தற்குரியதும் ஆகும்.

சங்க இலக்கியப் பெயர் : புன்னை
பிற்கால இலக்கியப் பெயர் : நாகம், புன்னை
உலக வழக்குப் பெயர் : புன்னை
ஆங்கிலப் பெயர் : அலெக்சாண்டிரியன் லாரெல்
தாவரப் பெயர் : கலோபில்லம் இனோபில்லம்
(Calophyllum inophyllum,Linn.)


புன்னை இலக்கியம்


ஐந்திணைக் கருப்பொருளைக் கூற வந்த இறையனார் அகப் பொருள் நூல், நெய்தல் திணைக்கு மரம் புன்னையும், ஞாழலும், கண்டலும் என்று குறிப்பிடுகின்றது. புன்னையைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான பாடல்களில் காணப்படுகின்றன. பத்துப்பாட்டில் ஒரு சில பாக்களில் இடம் பெறும் ‘நாகம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘சுரபுன்னை’ என்று உரை கூறியுள்ளாரெனினும், மலைபடுகடாத்தில் ‘நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்’ (520) என்ற அடியில் வரும் ‘நாகம்’