பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

சங்க இலக்கியத்


“ஒள்ளிணர் ஞாழல் முனையின் பொதி யவிழ்
 புன்னையம் பூஞ்சினை சேக்கும்”
-ஐங். 169 : 2-3

“பொன்னீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
 கானல் அம்பெருந் துறை”
-அகநா. 70 : 9-10

“நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய்”-குறுந். 318 : 2

மேலும், புன்னை மரம் தாழையொடும் வளரும் என்பர்:

“மன்றப் புன்னை மாச்சினை நறுவீ
 முன்றில் தாழையொடு கமழும்”
-நற். 49 : 8-10

“தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ
 படப்பை நின்ற முடத்தாள் புன்னை”
-அகநா. 180 : 12-14

“தெரியிணர் ஞாழலும் தேங்கமழ் புன்னையும்
 புரிஅவிழ் பூவின கைதையும் செருந்தியும்”
-கலி. 127 : 1-3

நெய்தல் நிலப்பாங்கான கடற்கரை ஓரத்திலும், உப்பங்கழிக் கரையிலும் புன்னை மரம் வளரும். அதன் வேர்கள் கடல் அலைகளால் அரிப்புண்டு புன்னை மரம் நிற்பதையும், அதன் கரிய கிளைகள் வளைந்து நிலத்தில் தோய்ந்து நிற்பதையும், குன்றன்ன பெரிய மணற்பாங்கில் புன்னை வளர்வதையும் புலவர்கள் பாடியுள்ளனர்:

“ . . . . . . . . . . . . . . . . . . . மயங்கு பிசிர்
 மல்கு திரைஉழந்த ஓங்குநிலைப் புன்னை”

-அகநா. 250 : 1-2

“எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ”-அகநா. 20 : 3

“பெருங்கடற் கரையது சிறு வெண்காக்கை
 கருங்கோட்டுப் புன்னை தங்கும்”
-ஐங். 161

“உரவுத் திரைபொருத திணிமணல் அடைகரை
 நனைந்தபுன்னை மார்ச்சினை தொகூஉம்”
-குறு. 175 : 2-3

“குன்றத் தன்ன குலவுமணல் அடைகரை
 நின்ற புன்னை நிலந்தோய் படுசினை”
-குறு. 236 : 3-4

“கரையன புன்னையும்”-பரிபா. 11 : 17

மற்றும் தமிழ்நாட்டின் கீழ்க்கடற்கரையில் புன்னை வளர்ந்து வந்தமையின், கிழக்கில் இருந்து வீசும் கடற்காற்றால் நாள்-