பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

97

தோறும் இம்மரம் தாக்கப்படும். இதனால் இதன் கிளைகள் மேற்கு நோக்கி வளைந்து வளரும். இதனை உற்று அறிந்த புலவர்கள் அங்ஙனமே கூறுவர்:

“புன்னை பூத்த இன்நிழல் உயர் கரைப்
 பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பை”
-நற். 91 : 2-6

“விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின் ஆஅய்”-நற். 167 : 2

நெய்தல் நிலத்தில் புன்னை மரங்கள் செறிந்திருப்பதைப் புன்னையங்கானல், புன்னைத்துறை, புன்னையம் பொதும்பு, புன்னைய நறும்பொழில், புன்னைய முன்றில் என்றெல்லாம் கூறுவர்.

இதன்பருத்த அடி மரத்தையும், கிளைகளையும், இதன் நிறத்தையும் பற்றிய குறிப்புகள் சில உள:

“பராஅரைப் புன்னை வாங்குகிளை தோயும்
 கானல் அம்பெருந் துறை”
-அகநா. 270 : 6-7

பராஅரைப் புன்னைச் சேரி”-நற். 145 : 9

படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை” -நற். 278 : 1

கருங் கோட்டுப் புன்னை”-நற். 67 : 5

நீல்நிறப் புன்னை”-நற் 4 : 2 ; 168 : 8

கருந்தாட் புன்னை”-நற். 231 : 7

பனிஅரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை”-நற். 87 : 6

எல்லி அன்ன இருள் நிறப்புன்னை”-நற். 354 : 5

பருத்த புன்னையின் அடி மரம் பற்றிய ஒரு நற்றிணைப் பாடல் நயத்தற்குரித்து. தலைவன் குறித்த குறியிடத்துத் தலைவியும், தோழியும் வந்து காத்திருக்கின்றனர். நெடுநேரங் கழித்துத் தலைவன் வருகிறான். அவனது தேரில் கட்டிய மணியோசை அவன் வரவினை அறிவிக்கின்றது. அதனைக் கேட்ட தோழி,

 

73-7