இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
105
புன்னை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | கட்டிபெரேலீஸ் |
தாவரத் துணைக் குடும்பம் | : | கட்டிபெரே |
தாவரப் பேரினப் பெயர் | : | கலோபில்லம் (Calophyllum) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இனோபில்லம் (inophyllum) |
தாவர இயல்பு | : | சிறுமரம், அழகானது. இலை உதிராதது. என்றும் பசுமையாக இருக்கும். நன்கு கிளைத்துப் பரவி வளரும். |
இலை | : | நீள்முட்டை வடிவானது. 4-52-3 அங்குல நீளமானது. தடிப்பானது; தோல் போன்றது. மேற்புறம் பளபளப்பானது. |
நரம்பு | : | நடு நரம்பு எடுப்பானது. இதில் 90° கோணத்தில் இரு பக்கமும் பல கிளை நரம்புகள் காணப்படும். |
மஞ்சரி | : | கலப்பு மஞ்சரி. கொத்தாகப் பூக்கும். இலைக்கோணத்திலும் கிளை நுனியிலும் உண்டாகும். |
மலர் | : | மொட்டு - முத்துப் போன்றது. அழகானது. சிறிது மங்கிய வெண்ணிறமானது. மலர் வெண்மையானது. |
புல்லி வட்டம் | : | 4 புறவிதழ்கள் ஒன்றோடொன்று தழுவிய அமைப்பானது. |
அல்லி வட்டம் | : | 4 புல்லி இதழ்களைப் போன்ற அமைப்புடையது. தூய வெண்ணிறமானது. |
மகரந்த வட்டம் | : | பல தாதிழைகள் அடியில் குவிந்திருக்கும். தாதுப்பை நேரானது. நீட்டு வாக்கில் வெடித்துத் தாதுக்களை வெளிப்படுத்தும். தாது மஞ்சள் நிறமானது. |