இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
111
தாவரச் சிற்றினப் பெயர் | : | இன்டிகா (indica) |
தாவர இயல்பு | : | பெரிய மரம். இதில் ஒரு வகையான பசை உண்டாகிறபடியால், இதனைப் பினேவார்னிஷ் மரமென்றும், இந்தியக் கோபால் வார்னிஷ் என்றும் கூறுவர். |
இலை | : | தோல் போன்று தடித்து அகன்ற இலை, முட்டை வடிவானது. 14 இணை இலை நரம்புகள் காணப்படும். |
மஞ்சரி | : | கிளை நுனியிலும், பக்கவாட்டிலும் இலைக்கட்கத்தில் உண்டாகும் கலப்பு மஞ்சரி. |
மலர் | : | வெண்மை நிறமானது. 8.அங்குல அகலமானது. மணமுள்ளது. |
புல்லி வட்டம் | : | மிகச் சிறிய பல புல்லிகள் அடியில் இணைந்துள்ளன. |
மகரந்த வட்டம் | : | 15 முதல் 50 வரை மகரந்தத் தாள்கள் உள்ளன. தாதுப்பை நீளமானது. தாதுப் பையிணைப்பு மூடிகஸ் எனப்படும். |
சூலக வட்டம் | : | 3-2 சூலிலைச் சூலகம். சூல் தண்டு சுபுலேட் எனப்படும். |
சூல் முடி | : | குறுகிய பிளவுள்ளது. |
கனி | : | ஒரு வித்துள்ள (காப்சூல்) வெடிகனி, முட்டை அல்லது வட்ட வடிவானது. மங்கலான பழுப்பு நிறமானது. |
விதை இலை | : | அகன்று சதைப்பற்றானது. சமமில்லாதது. முளை வேரையுட்கொண்டது. |
மேற்குத் தொடர்ச்சி மலையில் தென் கன்னடத்திலிருந்து திருநெல்வேலி வரையிலுள்ள 2500 அடி உயரமுள்ள மலைப்பாங்கில் வளரும். மரம் கருநீலப் பழுப்பு நிறம். ரெசீன் (Resin) என்னும் பசைப்பொருள் உள்ளது, விதையில் ஒருவித எண்ணெயுண்டாகிறது.