பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பலாசம்–புழகு–புரசு
பூட்டியா பிராண்டோசா (Butea frondosa,Koen.)

கபிலர், “பகன்றை பலாசம் பல்பூம்பிண்டி” (குறி. 88) என்று புரசு எனப்படும் பலாசம் பூவினையும், “அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்” (குறிஞ். 96) என்று புனமுருங்கையாகிய புழகின் பூவையும், தனித்தனியே குறிப்பிட்டுப் பாடுகின்றார். பிற்கால இலக்கியங்கள், பலாசம் என்பதைப் புரசு, முருக்கு, புன முருக்கு, புழகு, புனமுருங்கை, மலை எருக்கு என்ற பெயர்களால் குறிப்பிடுகின்றன.பலாசம் வலியற்ற ஒரு சிறுமரம். இதன் மலர்கள் செக்கச் சிவந்தவை.

சங்க இலக்கியப் பெயர் : பலாசம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : புழகு, முருக்கு
பிற்கால இலக்கியப் பெயர் : புரசு, புரசை, புனமுருக்கு, புனமுருங்கை, மலை எருக்கு.
உலக வழக்குப் பெயர் : புரசு, பொரசு, புனமுருங்கை, முருக்கமரம், செம்பூ மரம்.
ஆங்கிலப் பெயர் : காட்டுத்தீ மரம், பிளேம் ஆப் தி பாரஸ்டு—(Flame of the Forest)
தாவரப் பெயர் : பூட்டியா பிராண்டோசா
(Butea frondosa,Koen.)

பலாசம்-புழகு-புரசு இலக்கியம்

“பகன்றை பலாசம் பல்பூம்பிண்டி”-குறிஞ். 88

என்றார் கபிலர். இவ்வடியில் குறிப்பிடப்படும் ‘பலாசம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பலாசம்பூ’ என்றார். ஆயினும்,