பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

229

புன்கு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே-அகவிதழ் பிரிந்தவை
தாவரத் துணைக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilionatae)
தாவரப் பேரினப் பெயர் : பொங்காமியா (Pongamia)
தாவரச் சிற்றினப் பெயர் : கிளாப்ரா (glabra)
சங்க இலக்கியப் பெயர் : புன்கு
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : புன்கம்
உலக வழக்குப் பெயர் : புங்க மரம், புன்கம்
தாவர இயல்பு : சிறு மரம், 7-10 மீ. உயரமானது. நன்கு கிளைத்துத் தழைத்து வளர்வது. என்றும் பசிய இலைகளையுடையது.
இலை : சிற்றிலைகளை உடைய கூட்டிலை. எதிரடுக்கானது. இலைச் செதில்கள் சிறியவை. சிற்றிலைகள் நீள் முட்டை வடிவானது.
மஞ்சரி : நுனி வளர் பூந்துணர் இலைக் கோணத்தில் உண்டாகும். கொத்தாகக் காணப்படும்.
மலர் : அவரைப்பூப் போன்றது. மலரடிச் செதில்கள் நுண்ணியவை. விரைவில் உதிர்ந்து விடும்.
புல்லி வட்டம் : 5 பசிய புறவிதழ்கள் இணைந்து புனல் வடிவாக இருக்கும்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் 5, பதாகை இதழ் சற்று முட்டை வடிவானது. மேலே மடிந்து வளைந்திருக்கும். சிறகிதழ்கள் இரண்டும் இரு பக்கத்திலும் உள்ளன. ஒரு புறமாக நீண்டிருக்கும். அடியில் பட-