பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

சங்க இலக்கியத்

சிவனுக்கு எந்த அடியார் கொன்றையைச் சூட்டி, அவருக்கு அதனை உரியதாக்கினாரோ அறியோம். ஆனால், ஆத்தி மலரைச் சூட்டியவர் விசாரசருமர் என்பர் சேக்கிழார். தம் வழிபாட்டிற்குத் தடை செய்த தந்தையைத் தடிந்தவர் விசாரசருமர். அதனைப் பாராட்டிச் சிவபெருமான் இவரைச் சிவனடியார் அனைவருக்கும் தலைவராக்கினார்; தமக்கு ஒப்பாக அதிகாரம் கொடுத்தார். தாம் உண்ட கலன், உடுப்பவை, சூடுபவை யாவற்றையும் விசாரசருமருக்கு வழங்கி, சண்டேசுவரப் பதவியையும் அளித்தாராம். அப்பதவி வழங்கப்பட்டதன் சான்றிதழ் போன்று,

“. . . . . . . . . . . . . . . . . . அவர் முடிக்கு
 துண்டமதி சேர்சடைக் கொன்றை
 மாலை வாங்கிச் சூடினார்
[1] என்பர்

இது கொண்டு, கொன்றை ஒரு சான்றுப் பொருள் ஆகுமளவில், சிவபெருமான் முடி ஏறியதாயிற்று. விசாரசருமரும், ஆத்தியைச் சூட்டிக் கொன்றையைப் பெற்றுக் கொண்டார்.

இத்துணைச் சிறப்பிற்றாகிய கொன்றை ‘சரக்கொன்றை’ எனப்படும். இதனைப் பிங்கல நிகண்டு.[2] இதழ், கடுக்கை, தாமம், கொன்றை என்று சொல்லும். ‘மதலை, ஆர்க்குவதம் என்றாகும்’ என மேலும் இரண்டு பெயர்களைக் குறித்தது. எனினும், ‘கொன்றை’, ‘கடுக்கை’ என்ற பெயர்களே சங்க இலக்கியங்களில் காணப்படும் பெயர்களாகும்.

குறிஞ்சிக் கபிலர் குறிஞ்சிப் பாட்டினுள் “தூங்கிணர்க் கொன்றை” (86) என்று ‘பூங்கொத்துக்கள் தொங்கிக் கொண்டிருக்கும்’ இதன் இயல்பினைக் குறிப்பிடுகின்றார். இதன் உண்மையை நன்கறிதற் பொருட்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தாவரப் பூங்காவில் 1956-ஆம் ஆண்டில் ஒரு சிறு சோதனை செய்யப்பட்டது. கீழ் நோக்கித் தொங்குகின்ற இதன் பூங்கொத்து மேல் நோக்கித் தூக்கி வைத்துக் கட்டப்பட்டது. இங்ஙனம் மேனோக்கிக் கட்டப்பட்ட இவ்விணரின் நுனிப் பாகம் இரண்டு நாள்களில் திரும்பவும் கீழ் நோக்கி வளரத் தொடங்கிற்று. சற்று வளர்ந்த பின்னர், இவ்விணரின் நுனிப் பாகம், இரண்டு நாள்களில் திரும்பவும் கீழ் நோக்கி வளரத் தொடங்கிற்று. மறுபடியும்,

 

  1. பெரி. 4 சண்டேசுர : 56 : 3-4
  2. பிங். நிக: 2666