இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
291
ஆனால் ‘ஞாழல்’ பொன்னாவாரையாக இருக்க முடியுமா என்பது சிந்திக்கற்பாலது. பொன்னாவாரை மரமன்று; ஒரு புதர்ச்செடி எனினும், இப்போதைக்கு இதனை இப்பெயர் கொண்டே தாவரவியல் குறிப்புகள் தரப்பட்டுள்ளன, கேள்விக் குறியிட்டு.
ஞாழல் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே (Calyciflora) ரோசேலீஸ் (Rosales) |
தாவரக் குடும்பம் | : | சிசால்பினாய்டியே (Caesalpinoideae) |
தாவரப் பேரினப் பெயர் | : | காசியா (Cassia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | சொபீரா (sophera) |
சங்க இலக்கியப் பெயர் | : | ஞாழல் |
தாவர இயல்பு | : | புதர்ச்செடி. மிக அழகானது. |
இலை | : | சிறகன்ன கூட்டிலை; இரண்டிரண்டாக 5-10 அடுக்கான சிற்றிலைகள். |
மஞ்சரி | : | கலப்பு மஞ்சரி |
மலர் | : | மஞ்சள் நிறமானது. பொதுவாக மலர்கள் பெரியவை. |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள் |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள் |
மகரந்த வட்டம் | : | 10 தாதிழைகள், இவற்றுள் 3-5 மலட்டு இழைகளாகி விடும். |
சூலக வட்டம் | : | ஒரு செல், பல சூல்கள். |
கனி | : | ‘பாட்’ என்ற வெடியாக்கனி, தட்டையானது. |
விதை | : | கனியின் குறுக்கே அமைந்துள்ளன. |