பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

திலகம்
அடினாந்தீரா பவோனினா (Adenanthera pavonina, Linn.)

கபிலர் ‘போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி’ (குறிஞ். 74) என்று திலகத்தைக் குறிப்பிடுகின்றார். ‘திலகம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘மஞ்சாடி மரத்தின் பூ’ என்று உரை கண்டார். திலகம் எனப்படும் மஞ்சாடி மரத்தின் பூ செந்நிறமானது. இதன் விதையும் செந்நிறமானது.

சங்க இலக்கியப் பெயர் : திலகம்
உலக வழக்குப் பெயர் : மஞ்சாடி மரம், மஞ்சாடி; யானைக் குண்டுமணி
தாவரப் பெயர் : அடினாந்தீரா பவோனினா
(Adenanthera pavonina, Linn.)

திலகம் இலக்கியம்

மலைபடுகடாத்தில் நன்னன் சேய் நன்னனது அரண்மனை வாயிலில் காணப்படும் சந்தனம் முதலிய பொருள் வளத்தில் திலகப்பூவும் குறிப்பிடப்படுகின்றது.

“நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்”-மலைபடு. 520

இவ்வடியில் உள்ள ‘திலகம்’ என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘திலகப்பூ’ என்றாராயினும், ‘போங்கம் திலகம் தேங்கமழ் பாதிரி’ (குறிஞ். 74) என்புழி இதற்கு ‘மஞ்சாடி மரத்தின் பூ’ என்று உரை கூறியுள்ளார்.

சேர முனிவன் செய்தளித்த சிலம்பினை[1] அணிந்த சீரடிகளிலும் பெருங்கௌசிகனாரின் மலைபடுகடாத்துள்ளும் இவ்வடி அங்ஙனமே காணப்படுகின்றது. இதனுள் வரும் திலகத்திற்கு அரும்பத உரைகாரரும், அடியார்க்கு நல்லாரும் ‘மஞ்சாடி’


  1. சிலப்: 25:18